தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகராக விளங்கும் ஜெயம் ரவி தனது மனைவியை பிரியப் போவதாக இணையங்களில் தகவல்கள் வந்து கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும் அண்மைக்காலமாக திரை உலகில் வாழ்ந்து வரும் நட்சத்திர தம்பதிகள் திடீர் திடீர் என விவாகரத்தினை பெற்று வருகின்ற போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து உள்ளது.
இந்த போக்கானது துறை துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வெகுஜன மத்தியிலும் அதிக அளவு அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன என்று பல்வேறு வகையான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி..
ஜெயம் ரவியை பொறுத்தவரை தமிழ் திரை உலகில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் பல படங்களில் நடித்து அசத்தியவர் இவர் நடிப்பில் வெளிவந்த பேராண்மை தனி ஒருவன் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
மேலும் சில மாதங்களுக்கு முன்னால் ஜிவி பிரகாஷ் தனது மனைவியை விவாகரத்து செய்த நிகழ்வு உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அவரைப் போலவே ஜெயம் ரவியும் தனது மனைவி ஆர்த்தியை பிரிய இருப்பதாக வந்திருக்கும் செய்திகள் உண்மையானதா? இல்லையா? என்பது இன்று வரை எவருக்கும் உறுதியாக தெரியவில்லை.
எனினும் இவர்களுக்கு இடையே தற்போது கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளதால் விரைவில் விவாகரத்து பெற்று பிரிந்து விடுவார்கள் என்ற செய்திகள் இணையங்களில் அதிக அளவு வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த விஷயம் உண்மையாக கூடிய வகையில் தற்போது ஜெயம் ரவியின் மனைவி instagram பக்கத்தில் சூசகமாக ஒரு செய்தியை பகர்ந்திருக்கிறார். அது எல்லாமே போயிடுச்சு என்ற வாசகத்தை போட்டு அவர் புகைப்படங்களை வெளியிட்டு இருப்பதை பார்த்து விரைவில் விவாகரத்து பெற போகிறார்களா? என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களின் மத்தியில் கிளப்பி விட்டுள்ளது.
எல்லாமே போயிடுச்சு..
இதனை அடுத்து ஜெயம் ரவியின் மனைவி Instagram பக்கத்தில் எல்லாமே போயிடுச்சு என்று பதிவிட்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆழ்ந்த கவலையில் இருப்பதோடு ஜெயம் ரவியின் புகைப்படத்தையும் இவர் நீக்கி இருப்பதால் ஜிவி பிரகாஷ் விவகாரம் போல இவர்கள் விவாகரத்து பெற்று பிரிவார்களா? என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
இதனை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருக்கக்கூடிய இந்த விஷயம் அவர்களின் நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு வருவதால் இணையங்களில் அதிக அளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
விவாகரத்து ரகசியத்தை உடைத்த ஆர்த்தி..
இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயம் உண்மையாக கூடாது என்ற விதத்தில் உறுதியாக இருப்பதால் இது குறித்து உண்மையான தகவல்களை ஜெயம் ரவியோ அல்லது அவர் மனைவியோ பகிர்வதின் மூலம் ரசிகர்களின் மத்தியில் இருக்கக்கூடிய குழப்பமான சூழ்நிலை மாறும் என சொல்லலாம்.
எனவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் பதிலை எதிர்நோக்கி அனைவரும் காத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.