ஆர்த்திக்கு அதில் எல்லாம் விருப்பம் இல்ல.. என்னை கல்யாணம் பண்ணலைனா?.  வாய் திறந்த ஜெயம் ரவி.. வைரலாகும் வீடியோ

தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக சர்ச்சையை கிளப்பும் விஷயமாக ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து விஷயங்கள் இருக்கின்றன பெரும்பாலும் இந்த விவாகரத்து சங்கதிகள் இந்த அளவிற்கு பிரபலம் ஆவது கிடையாது.

ஏனெனில் விவாகரத்து செய்வதற்கு முன்பே பிரபலங்கள் தங்களுடைய மனைவிகளுடன் பேசி ஒரு புரிதலுக்கு வந்த பிறகுதான் விவாகரத்தே செய்வார்கள். ஆனால் ஜெயம் ரவி ஆர்த்தி விஷயத்தில் அப்படி இல்லை ஆர்த்திக்கு விருப்பம் இல்லாமலேயே ஜெயம் ரவி விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டு விட்டார்.

அதில் எல்லாம் விருப்பம் இல்ல

இதனால்தான் இது பெரிய சர்ச்சையாகி வருகிறது. மேலும் ஜெயம் ரவி எதனால் ஆர்த்தியை விவாகரத்து செய்கிறார் என்பதும் கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் ஆர்த்தி தரப்பில் இருந்து கூறும் பொழுது அவருக்கு ஜெயம் ரவியை விவாகரத்து செய்வதில் விருப்பம் இல்லை என்று தெரிகிறது.

 

ஆனால் ஜெயம் ரவி இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு எதற்காக இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பது மக்கள் மத்தியில் பேச்சாக இருந்து வருகிறது. நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து குறித்த அறிக்கை வெளியிடும் பொழுது அதில் தன்னை சுற்றியுள்ள அவர்களின் நலனுக்காக தான் இந்த கடினமான முடிவை எடுத்ததாக கூறியிருந்தார்.

என்னை கல்யாணம் பண்ணலைனா

இது பலருக்கும் நெருடலை ஏற்படுத்தியது அப்படி சுற்றி உள்ளவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அவரது மனைவி ஆர்த்தி என்ன செய்துவிட்டார் என்பது கேள்வியாக இருந்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கையை வெளியிட்ட ஆர்த்தி கூறும் பொழுது அவர் தன்னுடைய சுயநலத்திற்காக தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறியிருந்தார்.

மேலும் அது தனது பிள்ளைகளை பாதித்துள்ளது அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கின்றனர் இப்பொழுது அவர்களுக்கு துணையாக நிற்க வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன் என்று ஆர்த்தி பேசியிருப்பது தற்சமயம் ஆர்த்திக்கு அதிக ஆதரவாளர்களை உருவாக்கி இருக்கிறது.

வாய் திறந்த ஜெயம் ரவி

இந்த நிலையில் ஜெயம் ரவி முன்பு ஒரு பேட்டியில் ஆர்த்தி குறித்து பேசிய வீடியோ சமீபத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் பேசும் ஜெயம் ரவி ஆர்த்திக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையே கிடையாது அவருக்கு தொழிலதிபராக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கிறது.

ஒருவேளை ஆர்த்தி என்னை மட்டும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக ஒரு தொழிலதிபர் ஆகி இருப்பார் என்று ஜெயம் ரவி கூறி இருக்கிறார் இந்த வீடியோ இப்பொழுது ட்ரெண்டாக தொடங்கி இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version