ஒரு பெரிய நடிகரே மனைவியை ஏமாத்தலாமா?. அந்த ஒரு விஷயத்தால் ஆர்த்தி பக்கம் சேர்ந்த கூட்டம்.. சிக்கலில் ஜெயம் ரவி.!

கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி குறித்த விவாகரத்து விஷயங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் இது உண்மையா பொய்யா என்பது மட்டும் ரசிகர்களுக்கு தெரியாத விஷயமாக இருந்தது.

ஏனெனில் ஜெயம் ரவி பக்கத்தில் இருந்தோ அல்லது ஆர்த்தி பக்கத்தில் இருந்தோ இது குறித்து எந்த ஒரு செய்தியும் வெளிவராமல் இருந்தது. கால போக்கில் மக்களே இந்த விஷயத்தை மறந்துவிட்டு அடுத்த விஷயங்களை கவனிக்க சென்று விட்டனர்.

ஒரு பெரிய நடிகரே மனைவியை ஏமாத்தலாமா?

இந்த நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவியுடன் விவாகரத்து செய்து கொள்ளப் போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். குடும்ப நலன் கருதி இந்த  முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறியிருந்தார் ஜெயம்ரவி.

இதனை தொடர்ந்து ஆர்த்தி மீதுதான் தப்பு இருக்கும் அதனால்தான் ஜெயம் ரவி இப்படியான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் என்றெல்லாம் மக்கள் மத்தியில் பேச்சுக்கள் இருந்தன. ஆனால் அதற்கு முற்றிலும் முரணான ஒரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார் ஆர்த்தி.

அதில் அவர் கூறும்போது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும் எனது ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்று கூறியிருக்கிறார் ஆர்த்தி.

ஆர்த்தி பக்கம் சேர்ந்த கூட்டம்

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அவர் கூறும்பொழுது கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலமாக அதன் கௌரவம் மற்றும் கண்ணியத்தை இழந்துவிட்டது என்று மனம் நொந்து பேசியிருக்கிறார்.

மேலும் இதனால் தனது குழந்தைகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும் மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்க வேண்டியது எனது கடமையாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

சிக்கலில் ஜெயம் ரவி

இந்த நிலையில் இந்த அறிக்கை வெளியானதில் இருந்து ரசிகர்கள் பலரும் ஆர்த்திக்கு ஆதரவாக பேச துவங்கியிருக்கின்றனர் .ஒரு பெண் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு இப்படி தனியாக நிற்கிறார் ஜெயம் ரவி எப்படி அவர் இஷ்டத்துக்கு ஆர்த்தியிடம் எதுவும் கேட்காமல் விவாகரத்து குறித்த அறிக்கையை வெளியிடலாம் என்பது ரசிகர்களின் கேள்வியாக மாறி இருக்கிறது.

மேலும் 18 வருடங்கள் வாழ்ந்த பிறகும் கூட தனது குழந்தைகளை பற்றி எப்படி ஜெயம் ரவி நினைக்காமல் போனார். என்றெல்லாம் ரசிகர்கள் கேள்விகளை கேட்க துவங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த அறிக்கை வெளியானது முதலே ஆர்த்திக்கு ஆதரவான பேச்சுக்கள் அதிகரிக்க துவங்கியிருக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version