விவாகரத்து உறுதி.. இன்ஸ்டாகிராமில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி செய்த வேலை.. ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம்ரவி பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர ஹீரோ என்று அந்தஸ்தை பிடித்திருக்கிறார் .

அவர் முதன் முதலில் தன்னுடைய சொந்த அண்ணன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

நடிகர் ஜெயம் ரவி:

கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. முதல் படமே மாபெரும் வெற்றி பெற்று அவருக்கு பெரும் அடையாளத்தை கொடுத்தது.

அதை எடுத்து ஜெயம் ரவிக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியதை தொடர்ந்து ஜெயம் ரவி எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நடித்து பெரும் வெற்றி கொடுத்தார்.

மழை, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தாம் தூம், தில்லாலங்கடி, ஆதி பகவன், எங்கேயும் காதல், நிமிர்ந்து நில் , பூலோகம், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சைரன். இந்த திரைப்படம் ஓரளவுக்கு வசூலை ஈட்டி கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

முன்னதாக அவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் வரும் புகழ் பெற்ற நடிகராக பார்க்கப்பட்டார்.

அந்த திரைப்படமும் அவருக்கு மிகப்பெரிய மைல்கல்லாக அவரது சினிமா வாழ்க்கையில் அமைந்தது என்றே சொல்லலாம்.

15 வருட வாழ்க்கை விவாகரத்து:

தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து கவனத்தை செலுத்தி வரும் நடிகர் ஜெயம் ரவி 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி ரவி என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

இவர் பிரபல தயாரிப்பாளரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் சிறந்த காதல் ஜோடிகளாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்தார்கள். அப்போது அவுட்டிங் செல்வது ,வெளிநாடுகளுக்கு ட்ரிப் அடிப்பது, குடும்பத்தோடு எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதுமாக இருந்து வந்தார்.

இவர்கள் ரசிகர்களின் மிகச்சிறந்த ஜோடியாகவும் பார்க்கப்பட்டு வந்தார்கள். இதனிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென அவர்கள் இருவருக்கும் விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது .

அதாவது, ஜெயம்ரவி மற்றும் ஆர்த்தி ரவிக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் விவாகரத்தை நாடி இருப்பதாக கடந்து சில நாட்களாக அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்து அது வதந்தியாக பேசப்பட்டு வருகிறது .

விவாகரத்தை உறுதி செய்த ஆர்த்தி:

இப்படியான சமயத்தில் அதை உறுதிப்படுத்தும் வகையில் சில சம்பவங்கள் நடந்திருக்கிறது. ஆம், தனது சமூக வலைதள பக்கங்களில் ஜெயம் ரவி மற்றும் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அத்தனை புகைப்படங்களையும் நீக்கி இருக்கிறார் ஆர்த்தி.

இதன் மூலம் அவர் ஜெயம் ரவியுடன் விவாகரத்து என்பது உறுதி செய்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் எல்லோரும் பேரதிர்ச்சி அடைந்து விட்டார்கள்.

அவர்களின் விவாகரத்துக்கு அப்படி என்ன சம்பவம் நடந்துவிட்டிருக்கும் எனது ரசிகர்கள் யூகித்து பார்த்தால் ஜெயம் ரவியின் நடவடிக்கை கடந்து சில நாட்களாக சரியில்லை என்று கூறப்படுகிறது .

அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் பிரபல நடிகை ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்ததாகவும் இதனால் குடும்பத்தில் பெரிய பூதாகாரமே வெடித்ததாகவும் கூறப்படுகிறது.

கணவன் மனைவி இடையே பெரிய பிரச்சினை ஏற்பட்டு அது வலுவடைந்து ஜெயம் ரவிக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆதி ரவி தன்னுடைய மனைவியாக வேண்டாம் என அவர் தீர்க்கமான முடிவெடுத்து அவரை விவாகரத்து செய்ய முன் வந்ததாக கூறப்படுகிறது.

குடும்பத்தாருக்கு விருப்பம் இல்லை:

ஆனால் இந்த விவாகரத்து விவகாரத்தில் ஜெயம் ரவியின் குடும்பத்தாருக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம்.

அவர்களையும் மீறி தான் ஆர்த்தியை விவாகரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயம் ரவியின் இந்த விவாகரத்து முடிவால் ஆர்த்தி ரவியும் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறாராம்.

இதனால் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாக வெளிவரும் செய்திகள் கூறுகிறது. இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானால் தான் அது உண்மை என்பது நிரூபணம் ஆகும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version