ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்துக்கு காரணம் இதுதானா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தற்போது இணையம் எங்கும் பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் முதன்மையான இடத்தை ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து விஷயம் பிடித்துள்ளது என்றால் அது மிகையாகாது.

கடந்த சில மாதங்களாகவே இருவர் இடையே பிரச்சனைகள் இருப்பதாகவும் விரைவில் விவாகரத்து பெற்று விடுவார்கள் என்ற செய்திகள் இணையம் முழுவதும் ஆக்கிரமித்து வந்ததோடு அது குறித்து ரசிகர்களும் பேசி வந்த சூழ்நிலைகள் இருந்தது.

ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து..

இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் ஜெயம் ரவி ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து மனைவி ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆரம்ப காலத்தில் ஜெயம் ரவி தன்னுடைய அண்ணன் ராஜாவுடன் சேர்ந்து தொடர்ந்து ரீமேக் படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு மார்க்கெட்டை பிடித்துக் கொண்டார். அந்த வகையில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படம் இவருக்கு நல்ல ரிச்செய் கொடுத்தது.

அதுமட்டுமல்லாமல் இவர் பிற இயக்குனர்களின் இயக்கத்திலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் தாஸ், மழை ஆகிய படங்கள் வெளி வந்த போதும் அது சொல்லக்கூடிய அளவு வெற்றியை கொடுக்கவில்லை.

இதை அடுத்து மீண்டும் தன் அண்ணனோடு கூட்டணி அமைத்த இவர் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற பிளாக்பஸ்டர் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து விருந்து வைத்தார் இதுவும் தெலுங்கின் ரீமேக் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி ஆர்த்தி திருமணம்..

இப்படி பல படங்களை ஹிட் கொடுத்த ஜெயம் ரவிக்கு 2009 ஆம் ஆண்டு தான் உருகி உருகி காதலித்த ஆரத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர்களுக்கு ஆரவ்,அயான் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். இதில் மூத்த மகன் ஆரவ் தன் தந்தையின் படமான டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி பார்ப்பதற்கு சினிமா நடிகைகளை போல அழகாக இருப்பவர் அடிக்கடி சமூக வலைத்தள பக்கங்களிலும் நடிகைகளுக்கே டாப் கொடுக்கக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவார்.

விவாகரத்துக்கு யார் காரணம்..

இந்நிலையில் சில மாதங்களாகவே இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக இணையம் முழுவதும் பரபரப்பாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. எனினும் இது குறித்து இருவரும் எந்த விதமான கருத்துக்களும் தெரிவிக்காமல் இருந்தார்கள்.

இந்நிலையில் ஜெயம் ரவியே இன்று தனது காதல் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். எனினும் அவர்கள் விவாகரத்து காரணம் குறித்து அவர் அறிக்கையில் எதுவும் சொல்லவில்லை.

பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் அளித்த பேட்டி ஒன்றில் அவர்கள் விவாகரத்து செய்ய காரணமாக இருந்த நபர் பற்றி பேசி இருக்கிறார். அதில் ஆர்த்தியின் அம்மா சுஜாதாவுக்கு சங்கர் என்ற ஓர் வளர்ப்பு மகன் இருக்கிறார்.

சுஜாதா நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தை அந்த மகன்தான் நிர்வகித்து வருகிறார். மேலும் அண்மையில் ஜெயம் ரவியை வைத்து தங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் படம் பண்ண இருந்த சுஜாதா தன் வளர்ப்பு மகன் சங்கர் சொல்வதைக் கேட்டு தான் ரவி நடக்க வேண்டும் என மருமகனிடம் ஆர்டர் போட்டதை அடுத்து இது ரவிக்கு பிடிக்காமல் தான் தன் மனைவியிடம் சண்டை போட்டு ஈகோ மோதல்கள் ஏற்பட்டு பிரச்சனை பெரிதாக வெடித்துள்ளது.

இந்தப் பிரச்சனையால் தான் ஜெயம் ரவி தன் மனைவியை விவாகரத்து செய்து இருக்கிறார் என்ற விஷயத்தை ஓபன் ஆக போட்டு உடைத்து இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version