விவாகரத்து ஏன்..? ஜெயம் ரவியை பிரியும் செய்து குறித்து மனைவி ஆர்த்தி வெளியிட்ட பதிவு..!

தமிழ் சினிமா பிரபலங்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமான காரணத்தினால் தன் இவருக்கு ஜெயம் ரவி என்கிற பெயர் வந்தது பலருக்கும் தெரியும்.பிறகு ஜெயம் படம் கொடுத்த வெற்றியின் காரணமாகத்தான் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்றார் ஜெயம் ரவி.

தொடர்ந்து அவர் நடித்த நிறைய திரைப்படங்கள் பிறகு வெற்றியை கொடுத்தன. கிட்டத்தட்ட நடிகர் பிரசாந்த் போலவே இவரும் ஒரு சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார். அதற்கு தகுந்தாற் போல மெச்சூரிட்டியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்க துவங்கினார்.

ஜாலியான படங்கள்:

ஆரம்பத்தில் சந்தோஷ் சுப்பிரமணியம் சம்திங் சம்திங் மாதிரியான திரைப்படங்களில் மிகவும் ஜாலியான ஒரு இளமை பொங்கும் கதாபாத்திரமாக ஜெயம் ரவி கதாபாத்திரங்கள் இருக்கும். ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த தனி ஒருவன் மாதிரியான திரைப்படங்களில் ஒரு மெச்சூரிட்டியை பார்க்க முடியும்.

திரைப்படங்களில் அவரது வயதுக்கு தகுந்தார் போல கதை களங்களையும் மாற்றி தேர்ந்தெடுக்கத் தொடங்கினார். ஜெயம் ரவிக்கு காமெடி என்பது சூப்பராக ஒர்க் அவுட் ஆகி வந்தது. அதை அவர் தவிர்த்தது அவருக்கு ஒரு மைனஸ் என்றுதான் கூற வேண்டும்.

ஜெயம் ரவி ஆர்த்தி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அவர்கள் இருவரின் திருமண வாழ்வும் நன்றாகதான் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் சமீபகாலமாக ஜெயம் ரவிக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவதாக பேச்சுக்கள் இருந்து வந்து கொண்டிருந்தன.

மனைவியுடன் பிரச்சனை:

இதனை அடுத்து இந்த கருத்து வேறுபாடு பெரிய சண்டையை உருவாக்கியது. அதனால் இருவரும் பிரிய போவதாகவும் பேச்சுகள் இருந்தது. ஆனால் அதுக்குறித்து எந்த தகவலும் வெளியில் வராமல் இருந்தது.

ஜெயம் ரவி தரப்பில் இருந்தோ அவரது மனைவி தரப்பில் இருந்தோ யாரும் எந்த ஒரு தகவலும் வழங்காமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து சூசகமாக பதில் சொல்லும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்ட ஜெயம் ரவியின் மனைவி ”காதல் என்னும் வார்த்தை வார்த்தை அல்ல வாழ்க்கை” என்று ஒரு பதிவை போட்டிருந்தார்.

இதன் மூலமாக இவர்கள் இருவருக்கும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை மேலும் இவர்கள் இருவருக்கும் எந்த விவாகரத்தும் நடக்கப்போவதில்லை என்பதை மறைமுகமாக கூறியிருக்கிறார் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version