ஜெயம் ரவியின் திடீர் விவாகரத்து.. மன வேதனையில் ஆர்த்தி.. ரகசிய விஷயத்தால் ஏற்பட்ட குழப்பம்..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக இருந்து வந்த பல ஜோடிகள் இன்று அடுத்தடுத்து விவாகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் .

குறிப்பாக சமந்தா – நாக சைதன்யா, தனுஷ் – ஐஸ்வர்யா , ஜிவி – பிரகாஷ் சைந்தவி உள்ளிட்டவர்கள் லிஸ்டில் தற்போது ஜெயம் ரவி – ஆர்த்தி இணைந்து இருக்கிறார்கள் .

நட்சத்திரங்களின் விவாகரத்து:

இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துகொள்ளப்போவதாக சமீபத்திய தகவல் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் இருவரும் அதற்கு எந்தவிதமான ஒரு முற்றுப்புள்ளி தெரிவிக்கவில்லை. மாறாக அது உண்மைதான் என்பதை நம்பும் வகையில் ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஜெயம் ரவியுடன் எடுத்துக் கொண்ட அனைத்து புகைப்படங்களையும் நீக்கி இருக்கிறார் .

இதன் மூலம் அவர்கள் விவாகரத்தை அவர் உறுதி செய்திருக்கிறார். சிறந்த காதல் ஜோடியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்த இவர்கள் எடுத்துக்காட்டான ஜோடியாகவும் இருந்து வந்த நிலையில் இவர்களின் விவாகரத்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

மேலும் இதற்கான காரணம் என்று பார்த்தோமானால் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் நடித்த போது நடிகை ஒருவருடன் மிக நெருக்கமாக பழகி வந்தது தான் இவர்கள் பிரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

15 வருட வாழ்க்கை முடித்துக்கொண்ட ஜெயம் ரவி:

மேலும், இந்த விவாகரத்து விவகாரத்தில் ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்திக்கு எந்த ஈடுபாடுமே இல்லையாம். சொல்லப்போனால் அவருக்கு விவாகரத்தில் விருப்பமே இல்லையாம் .

ஜெயம் ரவியுடன் சேர்ந்து காதல் வாழ்க்கையை தொடர வேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாம். ஆனால் ஜெயம் ரவிக்கு தான் மிகுந்த மன உளைச்சல் அதிகமாகி ஆர்த்தியை விவாகரத்து செய்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் ஜெயம் ரவியின் குடும்பத்தார் ஒட்டுமொத்த பேருக்குமே இந்த விவாகரத்து நடக்கக் கூடாது என்று தான் இருந்திருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

திருமணம் ஆகி 15 வருடம் ஆகிய நிலையில் ஜெயம் ரவிக்கு இப்படி ஒரு எண்ணம் வந்தது ஏன் என்பது பரவலான கேள்வியாக இருந்து வருகிறது .

இந்த வாழ்க்கையில் அவருக்கு ஏதேனும் அதிர்ச்சியாக இருந்திருக்கலாம், அல்லது இந்த வாழ்க்கை விட்டு வெளியேற வேண்டும் என்று எண்ணம் இருந்திருக்கலாம், அல்லது இதைவிட பெட்டராக அவருக்கு வேறு ஏதேனும் தோன்றியிருக்கலாம் என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது.

அந்த நடிகையுடன் நெருக்கம்?

இதற்கெல்லாம் காரணம் என்ன என்று கேள்வி கேட்கும்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பிரபலமான நடிகை ஒருவருடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்ததாகவும் ஜெயம் ரவிக்கு அந்த நடிகையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதால் தான் ஆர்த்தியை விவாகரத்து செய்கிறார் என்றெல்லாம் கூறப்படுகிறது.

இந்த வதந்தி செய்தியால் தான் குடும்பத்தில் பெரிய குழப்பத்தை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மனைவிக்கும் கணவனுக்கும் இடையே மிகப் பெரிய பிரச்சனை வெடிக்க…அதனால் ஜெயம் ரவி மன உளைச்சலுக்கு ஆளாகி மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய முன்வந்து இருப்பார் என்றெல்லாம் கூறப்படுகிறது.

ஜெயம்ரவி புகைப்படங்களை நீக்கிய ஆர்த்தி:

இப்படியான நேரத்தில் இந்த வதந்தி செய்திகள் எல்லாம் உண்மைதான் என அப்பட்டமாக நம்பும் வகையில் ஆர்த்தி ரவி தனது சமூக வலைதள பக்கத்தில் ஜெயம் ரவி உடனான அனைத்து புகைப்படங்களையும் நீக்கி இருப்பது அனைத்தும் உண்மை என நிரூபித்துள்ளது.

எனவே இவர்களின் இந்த விவாகரத்து குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்பது தான் கூடுமானவரை உண்மையாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் மிக பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் ஆரவ் டிக் டிக் டிக் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு திருமணம் ஆகி கிட்டத்தட்ட 15 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது விவாகரத்தை நோக்கி இருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version