ஜெயம் ரவிக்கு இதை தரமாட்டேன்..! பிரபல நடிகையுடன் ஜெயம் ரவி..? உண்மை உடைத்த பிரபல நடிகர்..!

நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாக சில தினங்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனை தொடர்ந்து அவருடைய மனைவி ஆர்த்தி தரப்பிலிருந்து என்னுடைய பரிசீலனை இல்லாமல் என்னுடன் எந்த ஒரு விதமான எந்தவிதமான ஆலோசனையும் இல்லாமல் ஜெயம் ரவி தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவு இது.

நான் அவரோடு சேர்ந்து வாழத்தான் விரும்புகிறேன். அவரை தொடர்பு கொள்வதற்கு எத்தனையோ முயற்சி செய்தும் முடியவில்லை. தன்னை சுற்றி உள்ளவர்களின் நலனுக்காக என்னை பிரிவதாக கூறியிருக்கிறார். நானும் என்னுடைய இரண்டு குழந்தைகளும் என்ன செய்வது..? இப்படி என்னிடம் எந்த ஆலோசனை செய்யாமல் தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் என் கணவர் ஜெயம் ரவி என மறுப்பு அறிக்கையை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

பொதுவாக பிரபலங்கள் தங்களுடைய திருமண உறவை முறித்துக் கொள்ளும் பொழுது இருவருமே சேர்ந்துதான் அறிக்கையை வெளியிடுவார்கள் அல்லது தனித்தனி அறிக்கைகளாக ஒரே நேரத்தில் வெளியிடுவார்கள்.

ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியும் இணைய பக்கங்களில் நடிகைகளுக்கு இணையான பிரபலம் கொண்டவர். சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு லட்சக்கணக்கான ரசிகர்களை பாலோவர்களாக பெற்றிருக்கிறார் ஆர்த்தி.

இவர் ஏன் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று ஜெயம் ரவி அறிக்கை வெளியான உடனேயே ரசிகர்களால் பேசப்பட்டது. அதற்கேற்றார் போல தன்னுடைய ஆலோசனை இல்லாமல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் என அடுத்த நாள் காலையிலேயே பரபரப்பான அறிக்கையை வெளியிட்டார் ஆர்த்தி.

இந்நிலையில், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ஜெயம் ரவிக்கு விவாகரத்து கொடுக்கப் போவதில்லை என்ற முடிவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவருக்குள்ளும் ஏற்பட்டிருக்கக் கூடிய இந்த விரிசல் தற்காலிகமானது தானே தவிர நிரந்தரமானது கிடையாது.

மட்டுமில்லாமல் ஜெயம் ரவி பிரபல நடிகை ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் வருகிறது. இது உண்மைக்கு புறம்பான தகவல். ஜெயம் ரவியின் வளர்ப்பைப் பற்றி எனக்கு தெரியும்.

அவருடைய தந்தை மோகன் பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஜெயம் ரவிக்கு வேறொரு நடிகையுடன் தொடர்பு இருக்கிறது அதனால் தான் தன் மனைவி ஆர்த்தி விவாகரத்து செய்கிறார் என்று வரும் கூடிய தகவல்களில் துளி கூட உண்மை கிடையாது.

இந்த பிரச்சனையை இருவருடைய பெற்றோரும் சேர்ந்து சரி செய்வார்கள் என்ற நம்பிக்கை திரைத்துறையில் அனைவருக்குமே இருக்கிறது என தன்னுடைய சமீபத்திய வீடியோ ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version