ரஜினி கமலுடன் நடிக்க மறுத்த பாலச்சந்தர் பேத்தி நடிகை ஜெயஸ்ரீ பற்றி தெரியுமா..?

80, 90 கால கட்டங்களில் மைக் மோகன் நடிப்பு பலராலும் ரசிக்கப்பட்டதோடு கவனத்தை ஈர்த்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார். இவருடன் 1985 ஆம் ஆண்டு ஜோடியாக நடித்து வெளி வந்த தென்றலே என்னைத் தொடு திரைப்படத்தில் இயக்குனர் சி.வி ஸ்ரீதரால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை தான் ஜெயஸ்ரீ.

இந்த ஜெயஸ்ரீ யார் என்று கேட்டால் நீங்கள் அசந்து போவீர்கள். இவர் பழம் பெரும் நடிகையான எஸ் ஜெயலட்சுமியின் பேத்தியாவர். மேலும் எஸ் ராஜம் மற்றும் எஸ் பாலச்சந்தரின் பேத்தி என்பது அனைவருக்கும் தெரியாத விஷயமாகும்.

ரஜினி கமலுடன் நடிக்க மறுத்த நடிகை..

நடிகை ஜெயஸ்ரீ ஆரம்ப காலகட்டத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருந்தார். அது பற்றி அவரது பெற்றோர்களும் யோசிக்கவில்லை. திரைப்பட துறையை  பின்னணியை கொண்டு இருந்தாலும் தனது பெணா நன்கு படித்து வளர வேண்டும் என்று தான் அவரது தாயாக விருப்பப்பட்டார்.

இவரை தனது திரைப்படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் சிவி ஸ்ரீதர் விருப்பப்பட்டு அவரது அம்மாவிடம் தன்னுடைய படத்தில் அவர் மகள் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை சொல்லியதோடு அந்த படத்தில் நடிக்கவும் வைத்தார்.

மேலும் முதல் படம் மிக நல்ல வெற்றியை தந்ததை அடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் இவர் மனிதனின் மறுபக்கம், விடிஞ்சா கல்யாணம், நம்பினால் கெடுவதில்லை, ஆனந்த கண்ணீர், மௌனம் கலைகிறது, யாரோ எழுதிய கவிதை போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் திருமதி ஒரு வெகுமதி, தாலி தானம், மனிதன், ஆனந்த், நாளைய மனிதன், வரம் போன்ற  படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

அதுவும் பாலச்சந்தர் பேத்தி நடிகை ஜெயஸ்ரீ..

இதனை அடுத்து இவர் திருமணம் முடிந்ததை அடுத்து திருமணத்திற்கு முன்பே பல திரைப்படங்களில் நடிப்பதற்காக பெற்றிருந்த அட்வான்ஸ் தொகையை நல்ல வரன் கிடைத்ததை அடுத்து திருப்பிக் கொடுத்தார்.

அந்த வகையில் இவர் ரஜினியோடு குரு சிஷ்யன் படத்தில் கௌதமி செய்த கேரக்டரை செய்ய வேண்டி இருந்தது. எனினும் அந்த கேரக்டரை இவர் திருமணத்தால் மிஸ் செய்து விட்டார்.

இதனை அடுத்து தற்போதும் கூட இவர் இந்த ஒரு படத்தில் நடைபெறுக்கலாம் என்று தற்போது வரை வருத்தப்படக்கூடிய விஷயத்தை சொல்லி இருக்கிறார். 

அத்தோடு நீ யார் படத்தில் வேண்டும் என்றாலும் நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் என்னுடைய படத்திலேயே நடிக்க போவதில்லை என்று சொல்லிவிட்டாயே என ரஜினிகாந்த் கூட கலாய்த்திருக்கிறார். 

ரீசன் என்ன தெரியுமா?..

ரஜினி படத்தை மட்டுமல்ல கமலஹாசன் படத்தையும் இவர் வேண்டாம் என்று குறிப்பாக புன்னகை மன்னன் என்ற திரைப்படத்தில் ரேகா நடித்திருந்த ரோலில் தான் இவர் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் அதை விட பிடித்த முத்தக் காட்சியை தவிர்க்க வேண்டித்தால் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை.

மேலும் நடிகை ஜெயஸ்ரீ 1988 இல் வங்கி துறையில் நிபுணராக திகழும் சந்திரசேகரை மணந்து கொண்டதோடு அமெரிக்காவில் குடியேறிவிட்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இதனை அடுத்து நடிகை ஜெயஸ்ரீ ரஜினி கமலுடன் நடித்த மறுத்த காரணத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் லட்டு போல் வந்த வாய்ப்பை நழுவவிட்டு விட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் மத்தியில் பட்டிமன்றம் போட்டு பேசக்கூடிய அளவு மாறிவிட்டது என்று சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version