சிம்பு நயன்தாரா காதல் குறித்து நடிகர் ஜீவா சொன்னதை கேட்டீங்களா..?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக திகழும் சிம்பு என்கிற சிலம்பரசன் மற்றும் நடிகர் ஜீவா பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியமே இல்லை. இவர்கள் இருவருமே தமிழ் திரையுலகில் அதிகளவு ரசிகர்களை பெற்றிருப்பவர்கள்.

இவர்களைப் போலவே லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா தென்னிந்திய மொழி திரைப்படங்களில் அதிக அளவு நடித்து முன்னிலையில் இருக்கும் நடிகைகளில் ஒருவர்.

சிம்பு நயன்தாரா காதல்..

மலையாள திரை உலகில் ஆரம்ப நாட்களில் நடித்த நயன்தாரா தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து இவர் பல முன்னணியின் நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டாரும் லிட்டில் சூப்பர் ஸ்டாரும் இணைந்து படங்களில் நடித்ததை அடுத்து இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு டேட்டிங் வரை சென்று இருப்பதாக தகவல்கள் பல இணையங்களில் கசிந்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இதனைத் தொடர்ந்து இவரது காதல் பிரேக் அப் ஆன நிலையில் நடிகர் பிரபுதேவாவோடு சுற்றி வந்த நயன்தாரா கடைசியில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட கதைகளும் உங்களுக்குத் தெரியும்.

இதனை அடுத்து நடிகர் சிம்பு ஜீவாவை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து பேட்டியினை எடுத்த போது எப்போதுமே நீங்கள் டைலமோ, டைலமோ பாடலுக்கு தொடர்ந்து ஆடி வருகிறீர்களே இந்த பாடல் உங்களுக்கு பிடிக்குமா? அல்லது இந்த நடனத்தை ஆடிய சந்தியாவை பிடிக்குமா? என்ற கேள்வியை கேட்டார்.

நடிகர் ஜீவா சொன்ன விஷயம்..

இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத ஜீவா நடிகர் சிம்புவிடம் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அவர் அழுத்தி கேட்ட சந்தியாவையும் பிடிக்கும் அவர் என்னோடு பணியாற்றி இருக்கிறார் என்று பக்குவமாக சொல்லி பார்த்தார்.

எனினும் சிம்பு விடாப்பிடியாக சந்தியாவை பிடிக்குமா? என்று தொடர்ந்து அழுத்தம் திருத்தமாக கேட்டதை அடுத்து அவரது வாயை அடைக்க என்ன செய்தார் என்று சொன்னால் நீங்கள் வியந்து போவீர்கள்.

பேச முடியாமல் தவித்த சிம்பு..

ஜீவாவிடம் மாறி மாறி சந்தியாவை பற்றி கேள்வி எழுப்பிய சிம்புவின் வாய் பேச முடியாமல் போகக்கூடிய வகையில் ஜீவா என்ன செய்தார் என்றால் சிம்பு எங்கே ஆங்கிலத்தில் எட்டுக்கு அப்புறம் வரும் நம்பரை இங்கிலீஷில் சொல்லு பார்க்கலாம் என்று கேட்டார்.

இதனை சற்றும் எதிர்பாராத நடிகர் சிம்பு என்ன சொல்வது என்று தெரியாமல் பேச முடியாமல் மௌனமாக நின்று விட்டார். உங்களுக்கும் மிக நன்றாகத் தெரியும் எட்டுக்கு பிறகு வருவது ஆங்கிலத்தில் நயன் என்பது இதைத்தான் சிம்பாலிக்காக ஜீவா சொல்லி சிம்புவை வாயடைக்க வைத்து விட்டார்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் சிம்பு நயன்தாரா காதல் குறித்து ஜீவா சொன்ன விஷயம் இணையங்களில் மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியிலும் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இந்த விஷயத்தை ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் 17 வருடத்திற்கு முன்னாடியே சிம்புவை கலாய்த்து இருக்கும் ஜீவாவை பற்றி பெருமையாக பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version