Connect with us

News

15 நாள் படுக்கைக்கு வந்தால் அது நடக்கும்.. கார்த்தி பட நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!

By TamizhakamJuni 21, 2024 8:53 PM IST

வெள்ளி திரையில் கால்பதிக்க வேண்டும் என்பதே பல நடிகைகளுக்கு பெரும் ஆசையாக இருந்து வருகிறது. அப்படியாக  நாடகத்துறையில் பணியாற்றி வந்த நடிகை ஜீவிதாவிற்கும் வெள்ளி திரையின் மீது அதிக ஆசை இருந்தது.

ஆனால் வெள்ளித்திரைக்கு செல்லும் நடிகைகள் அதிகமாக சந்திக்கும் ஒரு விஷயமாக அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை என்பது இருந்து வருகிறது. தொடர்ந்து நடிகைகளை தவறாக பயன்படுத்தும் ஆட்கள் தமிழ் சினிமாவில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள்:

இதை எதையுமே அறியாமல் திரைப்பட வாய்ப்புகளை பெறுவதற்கு தமிழ் சினிமா பக்கம் சென்று அங்கு நிறைய பிரச்சனைகளை அனுபவித்தார் நடிகை ஜீவிதா. அது குறித்து அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

2018 ஆம் ஆண்டு கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் இவர் கார்த்தியின் அக்காவாக நடித்திருந்தார். கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் வெளியான சமயத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.

குடும்ப திரைப்படமான இந்த திரைப்படத்தில் கார்த்தியின் அக்காவாக நடித்த கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. அதனால் ஜிவிதாவிற்கும் அதனை தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.

15 நாள் ஒதுக்கணும்:

அது ஒரு விதத்தில் அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் கூட ஒரு விதத்தில் அது பிரச்சனையை கொண்டு வந்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அப்படி ஒரு திரைப்படத்தில் அவர் நடிக்க சென்ற பொழுது அந்த இயக்குனர் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசியிருக்கிறார்.

ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் என்கிற வார்த்தையையே அதற்கு முன்பு வரை ஜீவிதா கேள்விப்பட்டது கிடையாது. அதனால் இயக்குனர் என்ன கூற வருகிறார் என்பதே அவருக்கு புரியவில்லை. அதனை தொடர்ந்து அட்ஜஸ்ட்மெண்ட் என்றால் என்ன எனக்கு புரியவில்லை என்று கூறியிருக்கிறார்.

அதற்கு இயக்குனர் என்னிடம் நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டும். அதற்கு 15 நாட்கள் தயாராக இருங்கள் என்று கூறியிருக்கிறார். 15 நாட்களுக்கு என்ன அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என பார்க்கும் பொழுது முதலில் இயக்குனர் உங்கள் அறைக்கு வருவார்.

பிறகு தயாரிப்பாளர், கேமரா மேன் என வரிசையாக வருவார்கள் கடைசியாக ஹீரோவும் உங்கள் அறைக்கு வருவார் என்று தயங்காமல் கூறியிருக்கிறார் இதை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்த ஜீவிதா பிறகு அங்கிருந்து வந்து விட்டார் இந்த விஷயத்தை அவர்கள் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top