ஜெயம் ரவியின் அகிலன் படம் எப்படி இருக்கிறது..? – ஒரு முழுமையான திரை விமர்சனம்..!!

சென்னை துறைமுகத்தின் கிரைன் ஆபரேட்டராக இந்த படத்தில் ஜெயம் ரவியின் கேரக்டர் உள்ளது.இவர் இந்திய பெருங்கடலின் ராஜா என்ற பட்டத்தை பெறுவதற்காக துடிக்கும் ஒரு இளைஞராக இந்த படத்தில் இருக்கிறார்.

துறைமுகம் கிரேன் ஆபரேட்டராக இருந்ததால் அவருக்கு நிறைய கடத்தல் சம்பந்தமான பொருள்கள் கை மாற்றுவதில் கைதேர்ந்த ஒருவராக திகழ்கிறார்.

இந்நிலையில் சட்டவிரோத கடத்தல் கும்பல்களை கைது செய்யும் நடவடிக்கையில் டெல்லி காவல்துறை ஒரு தனிப்படை ஒன்றை நிறுவியுள்ளது.
இறுதியில் காவல் துறை அகிலனை கைது செய்ததா இல்லையா என்பதுதான் திரைப்படத்தின் மூல கருத்து.அது மட்டுமல்லாது கிங் ஆப் இந்தியன் ஓசன் பட்டம் அவருக்கு கிடைத்ததா இல்லையா என்பது படத்தில் இன்னொரு பகுதியாக உள்ளது.

கடல் இருந்து உப்பு பிரிக்கலாம் ஆனா ஹார்பர்ல இருந்து அகிலனை பிரிக்கவே முடியாது என்று பஞ்ச் அடித்து ரசிகர்களை தன்வசம் ஈர்த்து வருகிறார். இந்த படம் துறைமுகம் சார்ந்த காட்சிகள் நிறைய இருப்பதால் இயற்கை படத்தை எடுத்த எஸ்பி ஜனநாதனின் கதைக்களத்தை நினைவிற்கு கொண்டு வருகிறது.

கடத்தல் வணிகம் போக்குவரத்து என மூன்று பகுதிகளையும் தெளிவாக இயக்குனர் படம் எடுத்து காண்பித்துள்ளனர்.

கல்யாண கிருஷ்ணன் இயக்கியிருந்த இந்த படத்தில் உலகில் முக்கிய விஷயமான பசி வறுமை பற்றி பற்றிய ஒரு விழிப்புணர்வு படமாக இது அமைந்தது முதல் பாதி விறுவிறுப்புடன் எதிர்பார்ப்பை பூட்டி கொண்டே போனதால் இடைவேளைக்குப் பிறகு சுவாரஸ்யம் மிகவும் குறைந்து கொண்டே கூறலாம். மொத்தத்தில் படம் ஒரு வித்தியாசமான தமிழ் திரைப்படங்களில் இல்லாத காட்சிகளை கொண்டுள்ளதால் மக்களுக்கு பிடிக்கும் விதமாக அமைந்துள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …