சிவா மனசுல சக்தி 2ம் பாகம்.. ஜீவா கேட்ட அந்த விஷயம்… தெறித்து ஓடிய இயக்குனர் ராஜேஷ்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் ஜீவா தற்போது திரைப்படங்கள் ஏதும் இல்லாமல் எங்கு இருக்கிறார் என்று கேட்கக்கூடிய நிலையில் இருக்கிறார்.

தமிழ் திரைப்படங்களில் அதிகளவு நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கக் கூடிய இவர் தனக்கு என்று ஒரு கம் பேக் கொடுக்க ஒரு படம் கிடைக்காதா? என்று காத்திருக்கிறாரா? என்று கேட்கக் கூடிய வகையில் உள்ளது.

நடிகர் ஜீவா..

இவர் தமிழ் சினிமாவில் கற்றது தமிழ்,ஈ, கோ போன்ற படங்களில் நடித்து தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டவர். அது மட்டுமல்லாமல் சிவா மனசுல சக்தி, என்றென்றும் புன்னகை போன்ற கலகலப்பான படங்களில் நடித்து ஜீவாவின் மற்றொரு நடிப்பு பரிமாணத்தை வெளிக்காட்டியவர்.

இந்நிலையில் இவர் கடைசியாக ஹிட் படம் கொடுத்தது எது என்றால் அது கலகலப்பு 2 தான் இதற்குப் பிறகு நல்ல படத்தில் நடிப்பதற்காக ஒரு கதையைத் தேடி அலைகிறாரா? என்று கேட்கக்கூடிய அளவிற்கு திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருகிறார்.

இந்நிலையில் ஜீவாவை சமீபத்தில் சிவா மனசுல சக்தி திரைப்படத்தை எடுத்த இயக்குனர் ராஜேஷ் சந்தித்து இருக்கிறார். இந்த சந்திப்பு எது நிமித்தமாக நடந்தது என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருவதை அடுத்து அதற்குரிய விடையையும் கூறிவிட்டார்கள்.

சிவா மனசுல சக்தி இரண்டாம் பாகம்..

ஏற்கனவே திரை உலகில் முதல் படம் வெற்றி அடைத்தால் அடுத்தடுத்து இரண்டாவது பகுதி, மூன்றாவது பகுதி என்று எடுப்பது தற்போது வடக்கமாகிவிட்டது. அந்த வகையில் விக்ரம் படத்தின் இரண்டாவது பகுதி வெளி வந்து கமலஹாசனுக்கு மாபெரும் வெற்றியை தந்தது.

இதைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டு பகுதிகளாக வந்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்ற விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

அந்த வகையில் தான் சிவா மனசுல சக்தி படத்தின் இரண்டாவது பகுதியை எடுக்கலாம் என்று இயக்குனர் ராஜேஷ் கூறியதாக தற்போது விஷயங்கள் கசிந்து உள்ளது. இதை அடுத்து ஜீவாவும் மகிழ்ச்சியோடு இரண்டாவது பகுதியை எடுக்கலாம் என்பதை உற்சாகத்தோடு சொல்லி இருக்கிறார்.

ஜீவா கேட்ட விஷயம்.. தலை தெரித்து ஓடிய இயக்குனர் ராஜேஷ்..

அப்படி உற்சாகத்தோடு இருந்த ஜீவா என்ன தான் சொன்னார் தலை தெரித்து இயக்குனர் ராஜேஷ் ஓட காரணம் என்ன என்பது உங்களுக்கு தெரிய வேண்டாமா? ஏற்கனவே படம் இல்லாமல் இருக்கக்கூடிய ஜீவா கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் இருக்க முயற்சி செய்திருக்கலாம்.

ஆனால் அதை விடுத்து அந்த படத்தில் நடிக்க தனக்கு நான்கு கோடி ரூபாய் சம்பளமாக வேண்டும் என்ற விஷயத்தை சொன்னதை அடுத்து தான் தற்போது ஜீவாவின் மார்க்கெட் அதல பாதாளத்தில் உள்ள போதே இவ்வளவு பணத்தை சம்பளமாக கேட்கிறாரே என்று தலை தெரித்து ஓடிவிட்டார்.

 

இந்த விஷயத்தை தற்போது பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் பகிர்ந்து இருப்பதோடு எப்படித்தான் இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்க ஜீவாவிக்கு தோன்றியதோ என்பதையும் கேட்டு இருக்கிறார்.

இந்நிலையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் ஜீவா இவ்வளவு சம்பளம் கேட்டது தவறு என்பதை சுட்டிக்காட்டி இருப்பதோடு இந்த வாய்ப்பு ஜீவாவுக்கு கிடைக்குமா? அல்லது வேறு யாராவது பகுதி இரண்டில் நடிப்பார்களா? என்பது பற்றி பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version