வெற்றி வேண்டுமா, போட்டு பாரடா எதிர்நீச்சல் என்பது பிரபலமான ஒரு பாடலின் முதல் வரி. வாழ்க்கையில் வெற்றி வேண்டுமானால் எத்தனையோ தடைகளும், சிக்கல்களும், சிரமங்களும் வந்தே தீரும். அதை எல்லாம் கடந்து போராடினால்தான், வெற்றி கிடைக்கும் என்பதே இந்த வரி சொல்லும் தத்துவம்.
ஜோடி ஆர் யூ ரெடி
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற தனுஷ் மற்றும் ஜஸ்டினா சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு பேசினார்.
தனுஷ் – ஜஸ்டினா
அவர்கள் கூறியதாவது, வெற்றி பெறுவது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. பல கட்டங்களாக நடத்தப்படும் இந்த போட்டியில், மொத்த உழைப்பையும் போட்டு வெற்றிக்காக காத்திருக்கும் பலருக்கு கடைசியில் நூலிழையில் அந்த வாய்ப்பு பறிபோவது உண்டு. ஆனால் பல போராட்டங்களுக்குப் பிறகு நாங்கள் வெற்றி பெற்றோம் என்றனர்.
ஜஸ்டினா கூறுகையில், நான் கிட்டத்தட்ட ஆறு, ஏழு ஆண்டுகளாக இதற்காக போராடிக் கொண்டிருந்தேன். இது எனது மூன்று மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி. பல வருடங்களாக போராடிய போராட்டத்திற்கு இப்போதுதான் வெற்றி கிடைத்திருக்கிறது. இதற்கு வரதா மாஸ்டர் தான் காரணம்.
இதற்காக ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். நான் ஆரம்பத்தில் டான்ஸ் ஆட போகிறேன் என்று சொன்ன போது, என் வீட்டில் அதை யாரும் ஏத்துக்கவே இல்லை. அப்பா என்கிட்ட பேசுவதையே விட்டுவிட்டார். ஆனால் முதல் முறையாக என்னுடைய பர்பாமென்ஸ் பார்த்துவிட்டு, என்கரேஜ் பண்ணுனதே எங்க அப்பா தான். அது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
இப்போது, உன் பொண்ணு நல்லா பர்பாமென்ஸ் பண்றான்னு சொந்தக்காரங்க அப்பா அம்மாகிட்ட சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க.
பல்லில் அடிபட்டது
இந்தடான்ஸ் ஆடும் போது மூக்கை எல்லாம் உடைத்திருக்கிறோம். என்கூட ஆடிக் கொண்டிருக்கும்போது தனுஷ்க்கு பல்லுல அடிபட்டு பல்லு அப்படியே வெளியே வந்துவிட்டது, என்று கூறியிருக்கிறார்.
தனுஷ்பேசுகையில், லிப்ட் பண்ணி கீழே வரும் போது ஒருத்தரை ஒருத்தர் இடித்துக் கொண்டதால் பல்லில் அடிபட்டது. கப்பு வாங்கின பிறகு அந்த வலியெல்லாம் போய் விட்டது. கப்பை கையில் வாங்கும் போது பிறந்த குழந்தையை கையில் எடுக்கிற மாதிரி உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது.
பாட்டி இறந்துட்டாங்க…
ஜஸ்டினா தொடர்ந்து பேசுகையில், உருகி உருகி போனதடி என் மனசு பாட்டுக்கு நான் டான்ஸ் ஆடியபோது பயங்கர ஹிட் ஆனது. அந்த பாட்டுக்கு பிராக்டீஸ் பண்ணிட்டு இருக்கும்போது, எங்க பாட்டி இறந்துட்டாங்கன்னு எனக்கு போன் வந்தது. ஒரு மணி நேரம் அங்க போய் இருந்துகிட்டு இறுதி சடங்கில் கூட கலந்துக்காமல் பிராக்டீஸ்சுக்கு வந்து விட்டேன். அப்புறமாக அந்த பாடல் எல்லாராலும் பாராட்டப்படும்போது, பலரும், பாட்டிதான் உங்க பின்னாடி இருந்து சப்போர்ட் பண்றாங்கன்னு சொன்னாங்க என்று கண்கலங்கி பேசினார் ஜஸ்டினா.
நீ காலி அவ்ளோதான்
அதுபோல், டைட்டில் வின் பண்ணிட்டாலே நீ காலி அவ்ளோதான் என்று சொல்கிறார்கள். எல்லோருடைய மைண்ட் செட்லையும் அப்படித்தான் இருக்கு. அந்த மைண்ட் செட்டை உடைக்கணும் என்று தனுஷ் மற்றும் ஜஸ்டின் அந்த நேர்காணலில் ஆவேசமாக பேசி உள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
‘‘Jodi Are You Ready” டைட்டில் நேரத்தில் பாட்டி இறந்த துயரம், கண் கலங்கினாலும் போராடி ஜெயித்த தனுஷ், ஐஸ்டினா தன் வெற்றி அனுபவங்களை பகிர்ந்து ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளனர்.