சூப்பர் சிங்கர் டைட்டிலை ஜான் ஜெரோம் ஜெயிக்க இதுதான் காரணமா..? கிளம்பிய சர்ச்சை..!

விஜய் டிவி தொலைக்காட்சியானது ஸ்டார் விஜய் என்று பெயர் மாற்றப்பட்ட காலத்தில் இருந்து சில நிகழ்ச்சிகள் மிகவும் வரவேற்பை பெற்று பல வருடங்களாக நடைபெற்று வருகின்றன.

அப்படியான ஒரு சில நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. முதலில் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்கிற பெயரில் சிறுவர்களுக்கான பாடல் நிகழ்ச்சி உருவாக்கப்பட்டது. அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இளையவர்களுக்காக சூப்பர் சிங்கர் எனும் நிகழ்ச்சியும் துவங்கப்பட்டது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

கடந்த 10 வருடங்களாகவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விஜய் டிவியில் நல்ல வரவேற்பு பெற்று நடந்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் பாடுவது மட்டுமே விஷயமாக இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது அதில் கொஞ்சம் நகைச்சுவைகளையும் கலந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போலவே என்டர்டைன்மெண்டான ஒரு நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாற்றி இருக்கின்றனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பலர் பிரபலமடைந்து விஜய் டிவியிலேயே வேறு நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கு பெற்று இருக்கின்றனர். இந்த வகையில் சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பத்தாவது சீசன் நடைபெற்று வந்தது.

இதன் கிரான்ட் பினாலே நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பத்தாவது சீசனின் பினாலேக்காக பலரும் காத்திருந்த நிலையில் நேற்று மிகவும் ஆடம்பரமாகவே நடந்திருக்கிறது.

ஜான் ஜெரோம் வெற்றி:

இந்த நிகழ்ச்சியில் பாடகர் ஜான் ஜெரோம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். முதல் பரிசை வென்றிருக்கிறார் ஜான் ஜெரோம். மேலும் 60 லட்சம் மதிப்புள்ள வீடும் இவருக்கு பரிசாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் ஜான் ஜெரோம் ஜெயிப்பதற்கான காரணம் என்ன என்பது தற்சமயம் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகும் விஷயமாக இருந்து வருகிறது. சமீபத்தில்தான் தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் விஷசாராயத்தை அருந்தி 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் நடந்தது.

இதனை அடுத்து விஜய் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று இந்த விஷயத்தை ஆய்வு செய்து வந்தனர். மேலும் தமிழகத்தில் பெரிதாக பேசப்படும் விஷயமாக கடந்த சில நாட்களாக இது இருந்து வந்தது.

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஜான் ஜெரோமிற்கு டைட்டில் வின்னராக பட்டம் கொடுத்திருப்பது கேள்வியை எழுப்பி உள்ளது. இது இரண்டிற்கும் இடையே ஏதும் தொடர்பு உண்டா என ரசிகர்கள் யோசித்து வரும் பொழுது அங்கே இருந்த பிரியங்கா தேஷ் பாண்டே கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த ஜான் ஜெரோம் டைட்டில் வின்னராக மாறிவிட்டாய் என்று அழுத்தி கூறி இருந்தார்.

எனவே கள்ளக்குறிச்சி சம்பவத்தால்தான் அவருக்கு டைட்டில் வின்னர் பட்டம் கொடுக்கப்பட்டதா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர் திறமைக்கு கிடைத்த பரிசு தான் இது என்று அவரின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam