முற்றிய பஞ்சாயத்து.. சென்னை வந்தும் ஆட்டத்தை நிறுத்தாத ஜோதிகா.. இந்த கொடுமைய பாருங்க..!

தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற நடிகர்கள் வரிசையில் முக்கியமான நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்களில் சூர்யாவும் ஒருவர்.

பொதுவாக தொடர்ந்து வெறும் சண்டை காட்சிகளை கொண்ட படங்களில் மட்டும் நடித்தாமல் புது புது கதைகளை தேர்ந்தெடுத்து சூர்யா நடித்து வருகிறார். நேருக்கு நேர் திரைப்படம் மூலமாக அறிமுகமான சூர்யா ஒரு காலகட்டத்தில் அஜித் மற்றும் விஜய்க்கு போட்டி நடிகராக இருந்தார்.

அப்பொழுதெல்லாம் போட்டி நடிகர்கள் என்றால் விஜய், அஜித், சூர்யா என்று மூவரையும் தான் கூறுவார்கள். ஆனால் ஆக்ஷன் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் மதிப்புகள் அதிகமான காலகட்டங்களில் சூர்யா பின்னடைவை சந்திக்க துவங்கினார்.

வெற்றி நடிகர்:

அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் விஜய் அஜித் அளவுக்கு இல்லாமல் குறைய தொடங்கின. இருந்தாலும் சூர்யாவிற்கென்று ஒரு தனிப்பட்ட இடம் தமிழ் சினிமாவில் இருக்கதான் செய்கிறது. கொரோனாவிற்கு பிறகு சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா மும்பையில் ஒரு வீடு வாங்கி அங்கு குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார்.

இது குறித்து பலரும் பலவாறு பேசிக்கொண்டிருந்த பொழுது சமீபத்தில் ஜோதிகாவே இதற்கு பதிலும் அளித்து இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது கொரோனா சமயத்தில் மும்பையில் இருக்கும் எனது பெற்றோர்களை சென்று சந்திப்பது என்பது எனக்கு கடினமான காரியமாக இருந்தது.

அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதையே நான் அறிந்து கொள்ள முடியவில்லை. அதனால்தான் மும்பையில் ஒரு வீடு வாங்கினோம். மேலும் எனது குழந்தைகளின் கல்விக்கு மும்பை கொஞ்சம் மாறுதலான ஒரு இடமாக இருக்கிறது.

மும்பைக்கு செல்ல காரணம்:

எப்போதும் அவர்களை பிரபலங்களின் குழந்தைகள் என்றே பார்க்கிறார்கள் அங்கு அந்த பிரச்சினைகள் இல்லாமல் இருக்கிறது. அதனால் அவர்களது வளர்ச்சிக்கும் மும்பை ஆரோக்கியமான இடமாக இருக்கும் என்று கருதினேன் என்று கூறியிருந்தார் ஜோதிகா.

மேலும் குடும்பத்தை விட்டு பிரித்து சூர்யாவை அழைத்து வரவேண்டும் என்றெல்லாம் இதை செய்யவில்லை என்று கூறியிருந்தார் ஜோதிகா. ஆனால் அதற்கு மாறாக சமீபத்தில் சில நிகழ்வுகள் நடந்திருக்கிறது.

ஜோதிகா மும்பையில் இருந்து சென்னைக்கு ஏதாவது வேலையாக வந்தால் கூட சிவகுமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட ஒரு குடும்பமாக தங்கும் அந்த வீட்டில் தங்குவதில்லை என்று கூறப்படுகிறது. தனியாக இவருக்கு என்று ஹோட்டலில் அறைப்பிடித்து அங்குதான் தங்கிவிட்டு செல்கிறாராம்.

இதைக் கேட்டவுடன் சூர்யாவின் ரசிகர்களுக்கே இது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக இருக்கிறது. தொடர்ந்து இது பெரும் சண்டையில் போய் முடியுமோ என்று பேச்சுக்கள் இருந்து வந்தாலும் இதற்கு எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவல்களும் இல்லை என தெரிகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version