விருப்பமே இல்லாமல் சூரியாவுக்காக ஒப்புக்கொண்ட ஜோதிகா..! என்ன படம் தெரியுமா..?

நடிகை ஜோதிகா தன்னுடைய அற்புத நடிப்பால் ரசிகர் பலரையும் தன் பக்கம் ஏற்றுக்கொண்ட இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ஹிந்தி படங்களிலும் ஆரம்ப நாட்களில் நடித்து அசத்தியவர்.

இதனை அடுத்து தமிழில் இருக்கும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்க கூடிய நடிகை ஜோதிகா சற்று ஓவர் எக்ஸ்பிரஷன் செய்வதாக பலரும் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம்.

நடிகை ஜோதிகா..

நடிகை ஜோதிகா நடித்த படங்கள் பெரும்பாலானவை மாஸ் வெற்றியை அவருக்கு தந்ததோடு மட்டுமல்லாமல் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக அவரை மாற்றியது.

இந்நிலையில் இவர் சூர்யாவோடு இணைந்து நடித்த போது ஏற்பட்ட காதலை அடுத்து சில ஆண்டு காலம் காத்திருந்து அதன் பிறகு நடிகர் சூர்யாவை பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்குப் பிறகு நடிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்த இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர் 36 வயதினிலே என்ற தமிழ் திரைப்படத்தில் ரி என்ட்ரி கொடுத்தார்.

இதனை அடுத்து இவரது கூட்டுக் குடும்பத்தில் பிரச்சனைகள் வெடித்து.மேலும் நடிகர் சிவகுமாருக்கும் இவருக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டதை அடுத்த தான் மும்பைக்கு குடி பெயர்ந்தார் என்பது போன்ற செய்திகள் தினம் தினம் புதுசு புதுசாக வெளி வருகிறது.

மேலும் 36 வயதினிலே படத்தில் இவரது அசாத்திய நடிப்பு திறமையை பார்த்து மெச்சிய பலரும் இவருக்கு பாராட்டுதல்களை தொடர்ந்து தெரிவித்தார்கள். இதனை அடுத்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் அண்மையில் ஹிந்தி படத்தில் நடித்திருந்தார்.

சைத்தான் என்ற பெயரிடப்பட்ட அந்த படம் ஹிந்தி திரை உலகில் மாபெரும் வெற்றியை தந்ததோடு வசூலையும் வாரி குவித்த படங்களில் ஒன்றாக மாறியது. இதனை அடுத்து தற்போது ஹிந்தி படத்திலும் நடிக்க கவனத்தை செலுத்தி வருகிறார்.

விருப்பமே இல்லாமல் சூரியாவிற்காக ஒப்புக்கொண்ட படம்..

இந்நிலையில் நடிகை ஜோதிகா தான் விரும்பாத படம் ஒன்றில் சூர்யா கேட்டு கொண்டதற்கு இணங்க இந்த படத்தில் நடித்து இருப்பதாக தகவல்கள் இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வகையில் விருப்பம் இல்லாமல் சூர்யாவிற்காக ஜோதிகா நடித்துக் கொடுத்த படம் என்ன என்று அறிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வமாக இருக்கிறதா?

அந்த வகையில் மிகச் சிறந்த நடிகையான ஜோதிகா, ஸ்ரீகாந்த் படத்தில் நடித்த விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறார். இதனை அடுத்து இந்த படத்தின் இயக்குனர் படத்தின் கதையை நடிகர் சூர்யாவிடம் கூறியதை அடுத்து இந்த படத்தில் ஜோ நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று அவர் எண்ணினார்.

என்ன படம் தெரியுமா?

இதனால் சூர்யா அந்தப் படத்தின் கதை பற்றி தனது மனைவி ஜோதிகாவிடம் சொல்லி நடிக்க வேண்டும் என்று சொன்னதை அடுத்து நடிகை ஜோதிகா அந்த படத்தில் நடித்ததாக அந்த படத்தின் இயக்குனர் சொல்லி இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version