தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து.. சிம்புவுக்கு என்ன தொடர்பு..? போட்டு தாக்கும் பிரபலம்..!

தமிழ் திரை உலகில் காதல், கல்யாணம் பின்பு விவாகரத்து என்பது வழக்கமான ஒன்றாக தான் உள்ளது. அந்த வகையில் நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்கிறார்கள்.

20 வருடங்களுக்கு மேலாக சுமூகமாக சென்று கொண்டிருந்த இவரது திருமண வாழ்க்கை தற்போது கானல் நீராக்கி உள்ள நிலையில் இருவரும் சேர்ந்து வாழ்வார்களா? என்ற முயற்சியில் இரு வீட்டாரும் இறங்கி செயல் படுத்த முற்பட்டபோதும் சேர்ந்து வாழ்வது கேள்விக் குறியாய் தற்போது எழுந்துள்ளது.

தனுஷ் ஐஸ்வர்யா..

இதனை அடுத்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் பல்வேறு வகைகளில் வேண்டுகோள் விடுத்த நிலையில் அவர்களது முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையாமல் தற்போது விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகி இருப்பது வெளி வந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் இரண்டு மகன்களுக்காக இருவரும் சேர்ந்து வாழலாமே என்று பலரும் பலவிதமான கருத்துக்களை சொல்லி வரும் நிலையில் அதைப் பற்றி எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து ஒன்றே தீர்வு என்று உறுதியாக இருக்கிறார்.

தனுஷ் கூட விட்டுக் கொடுத்தாலும் ஐஸ்வர்யா விட்டுக் கொடுக்காமல் பிடிவாதத்தோடு இருந்து வருவதாக பலரும் பல்வேறு கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.

விவாகரத்துக்கு காரணம் சிம்பு வா?

இந்நிலையில் தற்போது தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்துக்கு காரணம் சிம்பு என்றும் ஏற்கனவே சிம்புவும், ஐஸ்வர்யாவும் ஒருவரை ஒருவர் காதலித்ததாக பல ஆண்டுகளுக்கு முன்பு ஓடிய கதை இணையத்தில் வெளி வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் எந்த விவகாரம் குறித்து தனியார் youtube சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். இந்த பேட்டியில் ஐஸ்வர்யா தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையில் இருக்கிறார்.

நீங்கள் நினைப்பது போல் ஒரு காலத்தில் நடந்தது உண்டு. அதை கிளறுவது அசிங்கமான வேலை. மேலும் சிம்புவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே காதல் என்று சொல்லப்பட்டது டீன் ஏஜ் பருவத்தில் வந்தது. ஆனால் தற்போது இருவரும் வயது முதிர்ந்த நிலையை அடைந்து விட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சினிமாவில் பல நட்சத்திரங்கள் காதல் திருமணம் செய்து கொண்டு, அதில் இருந்து வெளியே வந்து தனித்திருந்து பிறகு மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். எனவே இது சினிமா உலகில் மிகப்பெரிய விஷயம் அல்ல.

தற்போது சிம்பு முன்பு போல் இல்லை எப்போதும் பக்குவம் அறிவு இவற்றோடு செயல்பட கூடியவர். இப்போதும் அவருடன் பேசினால் தத்துவமாகத் தான் பேசுகிறார்.

எனக்குத் தெரிந்து தனுஷ் ஐஸ்வர்யா விவகாரத்தில் பழிவாங்கும் எண்ணம் சிம்புவுக்கு சுத்தமாக கிடையாது. அப்படி நினைத்திருந்தால் அவர் ஹன்சிகாவை கூட பழிவாங்கி இருக்கலாம்.

போட்டு தாக்கும் பிரபலம்..

மேலும் ஹன்சிகா குறித்து எந்த ஒரு இடத்திலும் சிம்பு அசிங்கமாக பேசியது கிடையாது. அது போல நயன்தாராவையும் பேசியது இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டால் சிம்புவுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பதை எளிதில் புரிந்து கொள்வீர்கள்.

இப்படி இவர் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்துக்கு சிம்புவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version