சந்தானத்திடம் இருக்கும் இந்த விஷயம்.. சிவகார்த்திகேயனிடம் இல்லை.. விளாசும் பிரபலம்..!

தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் என்றால் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துள்ளிக் குதித்து ஆரவாரம் செய்வார்கள்.

இவரைப் போலவே தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக உயர்ந்திருக்கும் சந்தனத்தை பற்றி சொல்லத் தேவையில்லை. டைமிங்கில் ரைமிங்கில் பேசக்கூடிய பேச்சு பலரையும் கவர்ந்தது.

சந்தானத்து கிட்ட இருக்கும் விஷயம்..

தற்போது சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தை கமலஹாசன் தயாரிக்க படத்திற்கு அமரன் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தப் படம் மட்டுமல்லாமல் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகி இருக்கும் சிவகார்த்திகேயன் பற்றி பத்திரிக்கையாளர் பிஸ்மி பேசும் போது சில விஷயங்களை சொல்லி சிவகார்த்திகேயனின் ரசிகர்களை காண்டாக்கிவிட்டார்.

சென்றாண்டு இவர் நடிப்பில் வெளி வந்த டாக்டர், டான் போன்ற படங்கள் அதிகளவு வசூலை தந்ததை அடுத்து தொடர்ந்து டாப் ஹீரோயின் வரிசையில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து இருக்கும் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார்.

இதனை அடுத்து மாவீரன் படம் இவருக்கு மாற்றாக இருக்கும் என நினைத்தது போல மாவீரன் படம் வெற்றியைத் தந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

சிவகார்த்திகேயனிடம் இல்லை..

இந்நிலையில் மாவீரன் திரைப்படத்தை தொடர்ந்து வெளி வந்த அயலான் திரைப்படமும் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து அமரன் படத்தில் ராணுவ வீரனாக நடித்த வருகிறார்.

இதனை அடுத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்திருக்கும் இவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் நடிக்க கமிட்டாக இருக்கிறார்.

திரையுலகில் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இருக்கும் சிவகார்த்திகேயனை மிஸ்டர் க்ளீன் என்று அனைவரும் அழைப்பார்கள். ஆனால் இமாம் கிளப்பிய பிரச்சனையை அடுத்து மிஸ்டர் கிளீன் இமேஜை கொஞ்சம் அசைத்து பார்க்க முயற்சி செய்தார்கள்.

விளாசம் பிரபலம்..

இந்நிலையில் 3 படத்தில் சந்தானத்தை தான் புக் செய்த இருந்தார்கள் என பிஸ்மி பேசும் போது சிம்பு சந்தானத்தை அழைத்து அதில் நடிக்க வேண்டாம் என்று சொன்னதால் சந்தானம் விலகி விட்டதாகவும் கூறி இருக்கிறார்.

இதற்குக் காரணம் சிம்பு தான் சந்தானத்தை சினிமாவிற்கு அழைத்து வந்ததால் சிம்புவுக்கு விசுவாசம் ஆக அவர் நடந்து கொண்டார்.

சிம்பு எப்படி சந்தானத்தை அழைத்து வந்தாரோ அது போல தான் தனுஷ் சிவகார்த்திகேயனை சினிமா துறைக்கு அழைத்து வந்தார்.

எனினும் இப்போது தனுசுக்கு போட்டியாக அவருடைய ஆபத்துக்கு எதிரிலேயே சிவகார்த்திகேயன் ஆபீஸ் போட்டிருப்பதை பார்த்து சிவகார்த்திகேயன் சந்தானத்தை போல இல்லை என்று பூடகமாக பேசியது இணையத்தில் வைரலாக தெறிக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version