அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு அழைத்தார்கள்.. புட்டு புட்டு வைத்த சமீரா ரெட்டி.. கெஞ்சிய பிரபலங்கள்..!

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சமீரா ரெட்டி மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ஆரம்ப நாட்களில் மாடலிங் துறையில் ஈடுபட்டு இருந்த இவர் சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து தெலுங்கு படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்த நினைத்த போது அந்த வாய்ப்பு கைநழுவி சென்றது.

நடிகை சமீரா ரெட்டி..

நிச்சயமாக தெலுங்கு படத்தில் அதுவும் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருந்த நடிகை சமீரா ரெட்டிக்கு கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு கிடைக்காததால் மனம் நொந்து போனார்.

இதனை அடுத்து சினிமா துறையை வேண்டாம் என்று முடிவெடுத்த அவர் ஒரு பிரபல வாட்ச் கம்பெனி ஒன்றில் வேலையில் சேர்ந்தார். இதனை அடுத்து ஆங்கில பத்திரிக்கை ஒன்று இவரது புகைப்படம் வெளி வர அதை பார்த்து பாலிவுட் தயாரிப்பாளர் பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

மேலும் பாலிவுட் படங்களில் அடுத்தடுத்து நடித்த இவருக்கு தெலுங்கில் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது மட்டுமல்லாமல் தமிழில் சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளி வந்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்து சேர்ந்தது.

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை இவருக்கு பெற்று தந்ததை அடுத்து தமிழில் பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் இவர் அஜித்துக்கு ஜோடியாக அசல் படத்தில் நடித்திருந்தார்.

மேலும் தமிழில் வெடி, வேட்டை என அடுத்தடுத்த படங்களுக்கு கமிட்டான இவர் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு அழைத்தார்கள்.. 

திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே 2014-ஆம் ஆண்டு தான் காதலித்து வந்த அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து பிள்ளை குட்டி என்று செட்டிலான இவர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்.

இந்நிலையில் சினிமா துறையில் மீடு விவகாரம் விஸ்வரூபமாக பேசப்பட்ட வேளையில் சினிமாவில் தன்னை யார் யாரெல்லாம் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தார்கள் என்பதை துணிச்சலாக சொல்லி அனைவரையும் கதிகலங்க வைத்தவர் சமீரா ரெட்டி என்று அண்மை பேட்டியில் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.

புட்டு புட்டு வைத்த சமீரா ரெட்டி..

மேலும் சமீரா ரெட்டி சினிமாவில் தன்னை யார் யார் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தார்கள். அத்துடன் அதிக அளவு ,டார்சர் கொடுத்த பிரபலங்கள் யார் என்பதை புட்டு புட்டு வைத்ததோடு மட்டுமல்லாமல் பாலிவுட் மற்றும் கோலிவுட்யை கதி கலங்க வைக்கக் கூடிய வகையில் நடந்து கொண்டார்.

இதனை அடுத்து சமீரா ரெட்டிக்கு போன் செய்த பல பிரபலங்கள் என் பெயரை சொல்லாதே என்று கெஞ்சும் அளவுக்கு துணிச்சலான பெண்ணாக சமீரா ரெட்டி நடந்து கொண்டவர் என்று அவரது பெருமையை மிகச் சிறப்பாக செய்யாறு பாலு பேட்டியில் தெரிவித்தார்.

இதனை அடுத்து எந்த விஷயம் இணையங்களில் வைரலாகி மாறி இருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.

இது மட்டுமல்லாமல் சமீரா ரெட்டியின் தைரியத்தை பாராட்டி தவறு நடக்கிறது என்றால் அதை இவரை போல சுட்டிக்காட்ட கூடிய நபர்கள் தான் சமூகத்திற்கு தேவை என்பதை ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version