நீயே திருட்டு பய.. முடிஞ்சா என் மேல கேஸ் போடு.. இளையராஜாவிடம் சீரிய பிரபலம்..!

சமீப காலமாக இளையராஜா தான் இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு அதற்கு வழக்கு தொடர்ந்துள்ளார்.

காப்புரிமைக்கு அடித்துக்கொள்ளும் இளையராஜா:

அதற்காக வைரமுத்துவிடம் மோதிக்கொண்டதும் பின்னர் வைரமுத்து பாடலுக்கு இசை பெரியதா? வரிகள் பெரியதா? என கேட்டிருந்தார்.

வைரமுத்துவின் இந்த கேள்விக்கு இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் இளையராஜாவுக்கு ஆதரவாக பேசி வைரமுத்துவை திட்டிய விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இப்படியான நேரத்தில் பிரபா பிரபல பத்திரிகையாளர் ஆன பாண்டியன் இந்த சம்பவம் குறித்து தனது கருத்தை மிகவும் காரசாரமாக பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

பத்திரிக்கையாளர் பாண்டியன் காட்டம்:

அவர் கூறியதாவது, இளையராஜாவை பொருத்தவரை இசையை உருவாக்கி மக்களுக்கு விற்பனை செய்பவர். இசையை உருவாக்கி மக்களுக்கு அர்பனை செய்பவர் கிடையாது.

இசைக்கு ஒரு விலையை நிர்ணயித்து அதை விற்பனை செய்பவர் தான் அந்த ஆள். தயாரிப்பாளரிடம் தன்னுடைய இசையை ரூ.50 லட்சமோ ரூ.1 ஒரு கோடியோ விலைக்கு விற்று பணம் பார்ப்பவர்தான் இளையராஜா.

அவருடைய இசை, சிந்தனை உரிமை, இது எல்லாத்தையும் விலை பேசி விற்றுவிடும் இளையராஜாவுக்கு காப்புரிமை கேட்கும் அருகதையே கிடையாது.

மேலும், அண்மையில் இளையராஜா – வைரமுத்துவின் விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அதாவது ஒரு முழு பாட்டு தனக்கு மட்டுமே சொந்தம் என காப்புரிமை கேட்டிருந்தார்.

அதற்கு வைரமுத்து சமபங்கு கேட்டு இசை பெரியதா? பாடல் வரிகள் பெரியதா என கேட்டதற்கு இளையராஜாவின் தம்பியும் இசையமைப்பாளர் கங்கை அமரன் கடுமையாக அவரை திட்டி விமர்சித்திருந்தார்கள்.

சொம்பு தூக்கி கங்கை அமரன்:

இளையராஜா போட்ட பிச்சையில் தான் நீ இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறாய். அவர் அன்று வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் இன்று வைரமுத்து யார் என்று அடையாளமே தெரியாமல் போய் இருப்பார் என இளையராஜாவுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.

இந்த விவகாரத்தை குறித்து தற்போது பாண்டியனிடம் பேட்டியில் கேட்டதற்கு இளையராஜாவுக்கு இப்போது ஆதரவு கொடுக்க யாருமே இல்லை.

வைரமுத்து என்றைக்கோ தனது தம்பியான கங்கை அமரனை துரத்தி விட்டார் அப்படி இருக்கும்போது தற்போது அனாதை ஆனந்தனாக இருக்கும் கங்கை அமரன் இந்த நேரத்தில் அவருக்கு ஆதரவு கொடுப்பது போல் பேசி ஒட்டிக்கொள்ளலாம் என பார்க்கிறார் என்றார் பாண்டியன்.

இளையராஜா மனுஷன் கிடையாது…உனக்கு வாய்ப்பு கொடுத்த பிரசாத் ஸ்டுடியோவுக்கும் நீ உண்மையாய் இல்லை, உன்னை கைபிடித்து வளர்த்து விட்ட பாவலர் வரதராஜனுக்கும் நீ உண்மையாக இல்லை.

தன்னுடன் கூட வளர்ந்து வரும் சக கலைஞர்களை பார்த்தால் அவ்வளவு இழிவாக பார்க்கிறாய். நீ என்ன பிறக்கும்போதே ஆடி கார், பென்ஸ் காரில் பிறந்து வளர்ந்தாயா?

மெரீனா பீச்சில் பிச்சை எடுத்த இளையராஜா?

மெரினா பீச்சில் உட்கார்ந்து. பிச்சை எடுப்பது போல் ஹார்மோனிய பெட்டியுடன் உட்கார்ந்து வாசித்து அஞ்சு பத்து பணம் சம்பாதித்தையே அதெல்லாம் மறந்து விட்டாயா?

இன்று இவ்வளவு பெரிய அந்தஸ்தில் மக்கள் உன்னை வளர வைத்திருக்கிறார்கள். ஆனால் நீ சொந்த ஊரில் பள்ளிக்கூடம் கூட கட்டவில்லை அந்த ஊர் மக்களுக்கு என்ன செய்திருக்கிறாய் இதுவரை?

உன்கிட்ட ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டு உன்னுடைய சிஷ்யனா வளர்ந்த பையன் தானே ஏ ஆர் ரகுமான் அவன் வளர்ந்த பிறகு அவன் வளர்ச்சியை பார்த்து ஏன் உனக்கு பிடிக்கவில்லை?

வளர்ச்சியை பார்த்து பெருமையுடன் உச்சந்தலையில் வைத்து கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால் மேடையில் வைத்து அசிங்கப்படுத்தின இல்ல?

உன் மாணவன் ஆஸ்கர் விருது பெற்றவன் என்றால் நீ எவ்வளவு பெருமைப்பட வேண்டி இருக்கும். பள்ளிக்கூடத்து வாத்தியார் பாட சொல்லிக் கொடுத்து பள்ளி மாணவன் கலெக்டர் ஆனால் யாருக்கு பெருமை குருநாதருக்கு தானே பெருமை?

ஆனால், நீ அப்படி பெருந்தன்மையோடு நடந்து கொண்டாயா? உன்னுடைய இயல்பே அதுதான்… உனக்கு பெருந்தன்மை தெரியாது, நல்ல குணம் தெரியாது, மரியாதை கொடுக்க தெரியாது, ஒரு நல்ல சிந்தனை தெரியாது.

இசையும் பெரிது மொழியும் பெரியது. இசை,மொழி, பாடல் எல்லாத்துக்கும் காசு வாங்கிய அப்புறம் உனக்கு எங்க இருந்து காப்புரிமை கொடுக்கப்படும்?

நீ அதைக் கேட்பதற்கு அருகதையே கிடையாது. பாட்ட இசையமைத்து காசுக்கு வித்துட்டு பணம் பார்க்கும் உனக்கு ராயல்டீ கொடுத்திரணும்னா யார் கொடுப்பாங்க?

சமீபத்தில் கூட இளையராஜா சன் பிச்சர் நிறுவனத்திடம் காப்பிரைட்ஸ் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை பற்றி என்ன சொல்கிறீர்கள் என கேட்டதற்கு.

பத்திரிக்கையாளர் பாண்டியன்… நீ மானங்கெட்ட போயிடுவ…. சன் பிச்சர்ஸ் பல கோடி பணத்தை போட்டு படத்தை எடுப்பவர்கள்.

படத்தை எடுக்கும்போதே காப்பிரைட்ஸ் எனக்கு இரண்டு வருஷம் தான் என்று ஒப்பந்தம் போடுவதில்லை. வலுவான சட்ட ஆலோசனை மிக்க மிகப்பெரிய தொழில் கம்பெனி சன் பிக்சர்ஸ்.

முடிஞ்சா என் மேல கேஸ் போடு:

அவர்களிடம் இப்படி மோதிக் கொண்டு கோர்ட்டுக்கு போனால் நீ தான் மானங்கெட்ட போயிடுவ. ஆயிரம் கோடி பணத்தை முதலீடாக போட்டு படம் எடுப்பவர் சன் பிக்சர்ஸ்.

சாக்கடையில் உன்னுடைய இசைக்கருவிகளை தூக்கிப்போட்ட பின்பும் மானங்கெட்டும் மரியாதை கெட்டு வந்து நின்ற பிரசாத் ஸ்டூடியோ போன்ற சன் பிக்சர்ஸ் நிறுவனம் இல்லை என்றார் பாண்டியன்.

உடனே அதற்கு ஆங்கர்…. இவ்வளவு இழிவாக இளையராஜா பற்றி பேசுகிறீர்களே உங்க மேலே கேஸ் போடப் போறார் பார்த்து பேசுங்க என கூறினார்.

அதற்கு பாண்டியன், உண்மை தானே நான் சொல்றேன். அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது இதுதான் இளையராஜா அவர் ஒரு திருட்டுப் பையன்.

இதற்காக என் மேல் கேஸ் போட்டாலும் பரவாயில்லை. அதை நான் பார்த்துக் கொள்கிறேன் ஆனால் அவரின் உண்மையான முகம் இதுதான் என வெட்ட வெளிச்சமாக கூறினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version