தொழிலதிபரை வளைத்து போட்ட நடிகை அசின்..! கோடி கோடியாய் கொட்டுது..! பிரபலம் உடைத்த தகவல்..!

கேரளாவில் கொச்சினில் பிறந்து தமிழ் சினிமாவில் நடிகையாக பிரபலமானவர் நடிகை அசின். 2001 ஆம் ஆண்டு முதன் முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அசின். அதற்கு பிரகு அவருக்கு மலையாளத்தில் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து தமிழில் திரைப்பட வாய்ப்பை தேடி வந்தார் நடிகை அசின். முதன் முதலாக எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

திரைப்படத்தில் அசின்:

அந்த திரைப்படமே தமிழில் அவருக்கு அதிக வரவேற்பை ஏற்படுத்திய படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து உள்ளம் கேட்குமே, கஜினி, மஹா, சிவகாசி என வரிசையாக ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களாக நடித்தார் அசின். இதனை தொடர்ந்து இவருக்கு ஹிந்தி சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது.

asin

ஹிந்தியில் ரெடி, ஹவுஸ் புல் 2, போல் பச்சான் ஆகிய பல படங்களில் நடித்தவர் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு நடிப்பதை விட்டுவிட்டார். ஏனெனில் அதற்கு பிறகுதான் ராகுல் ஷர்மா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்தார். அதற்கு பிறகு அவரை சமூக வலைத்தளங்களில் கூட யாரும் பார்க்கவில்லை.

இந்த நிலையில் அசினின் நிலைக்குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு விளக்கியுள்ளார். அசினின் கணவரான ராகுல் ஷர்மா ஒரு கோடிஸ்வர குடும்பத்தை சேர்ந்தவராவார். இந்திய மொபைல் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தை அவர்தான் நிறுவினார்.

தொழிலதிபருடன் வாழ்க்கை:

ஆனால் மொபைல் சந்தையில் ஏற்பட்ட போட்டியில் மைக்ரோமேக்ஸால் அவ்வளவாக நிலைத்து நிற்க முடியவில்லை. அசின் தனது அழகான பெண் குழந்தை மற்றும் கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் எல்லாம அவர் சினிமாவிற்கு வரவில்லை. சொல்லப்போனால் அசினின் காதல் கதையே கஜினி திரைப்பட கதைப்போல நல்ல சுவாரஸ்யமான கதைதான்.

asin family

நடிகை அசினின் நண்பரான அக்‌ஷய் என்பவர் மூலம்தான் அவருக்கு தொழிலதிபர் ராகுல் ஷர்மா பழக்கமாகியுள்ளார். பழக துவங்கும்போது அவர் தொழிலதிபர் என்றோ அல்லது கோடீஸ்வரர் என்றோ அசினுக்கு தெரியாது.

தாமதமாகதான் அவர் தொழிலதிபர் என்பது அசினுக்கு தெரிந்துள்ளது. அவருடைய அடக்க குணம் மற்றும் அவரது பண்பை பார்த்து ராகுல் ஷர்மாவை காதலிக்க துவங்கினார் அசின். ராகுல் ஷர்மாவும் அவர் காதலை ஏற்றுக்கொண்டதை அடுத்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

ராகுல் ஷர்மாவை போலவே அசினும் பணக்கார குடுமப்த்தை சேர்ந்தவராவார். சும்மா ஒரு ஜாலிக்காகதான் அவர் சினிமாவிற்கு நடிக்க வந்தார். தற்சமயம் சினிமாவை விட்டு விலகிய அசின் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் அசின் என கூறியுள்ளார் செய்யாறு பாலு.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version