தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து பெரும் புகழ்பெற்றவர் தான் நடிகர் லிவிங்ஸ்டன்.
இவர் நடிப்பை தாண்டி திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து வருகிறார். 1988ல் வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்ததன் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார் .
அதையடுத்து லிவிங்ஸ்டன் 1996 இல் சந்திர புருஷன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
நடிகர் லிவிங்ஸ்டன்:
தொடர்ந்து திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து பல்வேறு சீரியல்களிலும் சீரியல் நடிகராக நடித்து இல்லத்தரசிகளின் பிரபலமான நடிகராகவும் பார்க்கப்பட்டு வந்தார்.
சின்ன சின்ன ரோல்கள் என எது கிடைத்தாலும் அதில் தன்னுடைய நடிப்பை மிக கச்சிதமாகவும் அழுத்தமானதாகவும் பதிவு செய்து வந்ததன் மூலம் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடுத்தக்கது .
இவர் கடைசியாக ரஜினி நடித்த லால்சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார். முதன் முதலில் இவர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.
அதன் மூலம் திரைப்படம் எடுக்கும் நேக்குகளை கற்று தெரிந்து பிறகு 1982 ஆம் ஆண்டு வெளிவந்த டார்லிங் டார்லிங் டார்லிங் படம் மூலம் நடிகராக அறிமுகமாகினார்.
தொடர்ந்து கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக குணச்சித்திர நடிகர் ஆகவே நடித்து வருகிறார். விரலுக்கேத்த வீக்கம், சொல்லாமலே, என் புருஷன் குழந்தை மாதிரி உள்ளிட்ட சில படங்களில் மட்டும் ஹீரோவாக நடித்துள்ளார்.
குணச்சித்திர நடிகராக லிவிங்ஸ்டன்:
தொடர்ச்சியாக ஹீரோ வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் துணை கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.
நடிகர் என்பதை தாண்டி டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பல படங்களுக்கு இவர் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் விஜய், விஜயகாந்த், அஜித், பிரசாந்த், ஜெயம் ரவி, தனுஷ் கருணாஸ் உள்ளிட்ட பல ஹீரோக்களின் திரைப்படங்களிலும் லிவிங்ஸ்டன் முக்கிய ரோல்களிலும் குணசித்திர ரோல்களிலும் நடித்து புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.
லிவிங்ஸ்டனுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் ஜோவிடா லிவிங்ஸ்டன் பிரபல சீரியல் நடிகை என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.
நீச்சல் உடையில் மகள்:
ஆம், ஜோவிடா அருவி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.
இதனிடையே எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஜோவிடா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் .
அந்த வகையில் தற்போது சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட படு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த இன்ஸ்டாவாசிகளை கிறுகிறுக்க வைத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.