2 முறை அபார்ஷன்.. 42 வயதில் மீண்டும் கர்ப்பம்.. ஆனால்.. இப்போ… நடிகை ஜூலி எமோஷனல்..!

சினிமாவில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தாலும், சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு கவனத்தை பெற்று விடுகின்றனர். அது காமெடி காட்சியாக இருந்தாலும், ஒரு சில சீன்களில் வந்து போகும் துணை பாத்திரமாக இருந்தாலும், அவர்கள் முகம் மக்களுக்கு தெரிந்து விட்டால் போதும்.

ஜூலி

அதில் குறிப்பாக நடிகை ஜூலி, சீரியல்களில், படங்களில் நடித்து பிரபலமடைந்தவர்.

விவேக் நடித்த ஒரு படத்தில், ஒரு காமெடி காட்சி பஞ்சாயத்து வரும். அதில் மைனர் குஞ்சு என்னை கெடுத்துவிட்டார் என்று பஞ்சாயத்தில் ஒரு பெண் புகார் சொல்வார். அவர் தான் இந்த நடிகை ஜூலி.

இப்போது அவருக்கு 42 வயது ஆகிறது. அவர் இப்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார்.

இந்நிலையில் தனது கணவர் மணிகண்டனுடன் ஒரு நேர்காணலில் பங்கேற்ற ஜூலி, தனக்கு இரண்டு முறை அபார்சன் ஆனது குறித்தும், குழந்தை பிறப்பை பலரும் தள்ளி போட்டு இருக்கும் நிலையில், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் இந்த நேர்காணலில் வெளிப்படையாக சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

ஜூலி, சினிமாவில் மட்டுமல்ல சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்கள் ஒளிபரப்பாகும் சீரியல்களையும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைமாத கர்ப்பிணி

இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார் ஜூலி. அந்த நேர்காணலில் அவர் கூறியதாவது,

குழந்தை என்பது எனக்கும், என் கணவருக்கும் ரொம்ப ஸ்பெஷல். ஏனென்றால் திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகிவிட்டது. நான் முதல் முறையாக கர்ப்பமான போது அது அபார்ஷன் ஆகிவிட்டது. இரண்டாவது முறையாக கர்ப்பமான போது கர்ப்பப்பை குழாயில், குழந்தை இருந்ததால் அதுவும் அபார்ஷன் பண்ண வேண்டியதாகி விட்டது.

மூன்றாவது முறையாக..

இப்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறேன். இந்த டெஸ்ட் எடுத்து பார்த்தபோது குழந்தை நல்ல முறையில் இருப்பதாக கூறியதால், நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம். இந்த குழந்தை கண்டிப்பாக பிறக்கும் என்று உறுதியானதால் ஹாஸ்பிடலில் நான் கதறி கதறி அழுதேன்.

சிலர் உனக்கு 42 வயதாகி விட்டது. எப்படி குழந்தை பிறக்கும் என்று கேட்கிறார்கள். எனக்கு ஒரே ஆசைதான். என்னுடைய கணவரை சந்தோஷமாக பார்த்துக்க வேண்டும். என்னுடைய கணவருடைய பிரெண்ட்ஸ் எல்லாம் குழந்தையோட இருக்கும்போது, இவர் மட்டும் தனியா நிற்கிற போது, எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும்.

இப்போது வயது 42

எங்களுக்கு ட்ரீட்மென்ட் மூலமாகதான் குழந்தை பிறக்கப்போகிறது. எனக்கு இப்போது 42 வயது, இப்போதுதான் கர்ப்பமாக இருக்கிறேன். சில வளைகாப்பு நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் போகும் போது, இது மாதிரி எப்போது நமக்கு நடக்கும் என்று கூட ஏங்கி இருக்கிறேன்.

இரண்டு முறை குழந்தை அபார்ஷன் ஆனபோது, மிகவும் பயங்கர டிப்ரசனாகி நான் வாழ்க்கையை வெறுத்திருக்கிறேன். என்னுடைய கணவரும் என் குடும்பமும் தான் எனக்கு முழு ஆதரவாக இருந்து, என்னை இந்த துயரத்தில் இருந்து வெளியே வர வைத்தார்கள்.

சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குங்க

எனக்கு டான்ஸ் என்றால் உயிர். அதனால் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பண்ணி என்னுடைய மனநிலையை மாற்றிக் கொண்டிருந்தேன். இந்த முறை கர்ப்பமானதும் ஐந்து மாதம் வரை யாருக்குமே சொல்லவில்லை.

நான் எல்லோருக்கும் சொல்வது ஒரே அட்வைஸ்தான். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு சீக்கிரமாகவே குழந்தையை பெற்றுக் கொள்ளுங்கள். வேலை எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும். எப்போது வேண்டுமானாலும் பணம் சம்பாதித்துக் கொள்ளலாம். குழந்தை பிறப்பை மட்டும் தள்ளி போடக்கூடாது என்று, இந்த நேர்காணலில் ஜூலி பேசியிருக்கிறார்.
அப்போது அவரது கணவர் மணிகண்டன் அவருடன் இருந்தார்.

2 முறை அபார்ஷன், 42 வயதில் மீண்டும் கர்ப்பம் ஆன நிலையில், நடிகை ஜூலி எமோஷனலாக தன் உணர்வுகளை இந்த நேர்காணலில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam