பிரபல நடிகை ஜோதிகா தற்போது மலையாள படமொன்றில் நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் தன்னை இணைத்துக் கொள்வதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அவர் வெளியிட்டுள்ள கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இளம் நடிகைகள் எல்லாம் ஓரமா போங்க என்று இவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
நடிகை ஜோதிகா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார் நடிகை ஜோதிகா.
இயக்குனர் பாலா இயக்கத்தில் நாச்சியார் மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் இயக்குனர் ராதாமோகனின் காற்றின் மொழி மற்றும் ராட்சசி ஜாக்பாட் தம்பி பொன்மகள்வந்தாள் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த ஹவ் ஓல்ட் ஆர் யூ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான 36 வயதினிலே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சூப்பரான ரீஎன்ட்ரி கொடுத்திருந்தார் அம்மணி.
தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் மம்முட்டி ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் போஸ்டரை நடிகர் மம்முட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
நடிகை ஜோதிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் போஸ்டர் வெளியானது. இந்த படத்தில் தன்னை இணைத்துக் கொள்வதற்காக தற்போது கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார் நடிகை ஜோதிகா.
அந்த வகையில் தற்போது இவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசு ஆகல என்று நடிகை ஜோதிகாவின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.