அதுக்காக காத்திருக்கிறேன்.. சூரியா பிரிவு விவகாரம்.. விளாசிய ஜோதிகா..!

திரை உலகில் நட்சத்திர ஜோடிகளாக பலர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இளம் நட்சத்திர ஜோடிகளாக ஜொலித்த நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

வாரிசு நடிகரான சூர்யா ஆரம்பத்தில் பல படங்களில் சோபிக்க முடிய முடியாவிட்டாலும் அடுத்தடுத்து தனது திறமையை வளர்த்துக் கொண்டு தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.

சூர்யா மற்றும் ஜோதிகா..

நடிகை ஜோதிகா வாலி திரைப்படத்தில் அறிமுகமாக இருந்தாலும் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து விட்டார். அந்த படத்தில் சூர்யாவோடு இணைந்து நடிக்கும் போது காதல் ஏற்பட்டு உள்ளது.

இந்தக் காதலானது படிப்படியாக வளர்ந்து காக்க காக்க படத்தில் இவர்கள் இருவரது ரியல் கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆனதை அடுத்து பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்கள்.

சினிமா, காதல் என்று இரண்டு குதிரைகளில் பயணம் செய்த இவர்கள் தற்போது தியா என்ற மகளுக்கும் தேவ் மகனுக்கும் பெற்றோர்களாக இருக்கிறார்கள்.

அதுக்கா காத்திருக்கிறேன்..

திருமணத்துக்குப் பிறகு திரை உலகில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த நடிகை ஜோதிகா மீண்டும் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு ரீஎன்றி கொடுத்தார்.

அது மட்டுமல்லாமல் ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் இவர் தன் குடும்பத்தை மும்பைக்கு ஷிப்ட் செய்து விட்டார். இவரைப் போலவே நடிகர் சூர்யாவும் பாலிவுட்டில் கவனம் செலுத்துவதை அடுத்து மும்பைக்கு செட்டிலான இவர்களைப் பற்றி பல்வேறு வகையான விஷயங்கள் கசிந்துள்ளது.

சூர்யா பிரிவு விவகாரம்..

சென்னையை விட்டு மும்பைக்கு சென்ற காரணத்தினால் சிவகுமாருக்கும் ஜோதிகாவுக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு சூர்யாவை சிவக்குமார் இடம் இருந்து பிரித்து விட்டதாக தகவல்கள் வந்தது.

இந்நிலையில் ஜோதிகாவின் போக்கு சிவக்குமாருக்கு பிடிக்கவில்லை என்ற கருத்துக்கள் இணையங்களில் அதிக அளவு பரவி வரக்கூடிய நிலையில் ஜோதிகா தமிழ்நாட்டில் ஓட்டு போட வராததை ஒரு மிகப்பெரிய விஷயமாக சித்தரித்தார்கள்.

அந்த வகையில் பயில்வான் ரங்கநாதன் சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோவில் நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் பிரிந்து வாழ்வதாக சொல்லி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஜோவின் பதிலடி..

இதை அடுத்து சில ஊடகங்கள் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாகவே செய்திகளை வெளியிட்டு வரக்கூடிய வேளையில் பொய்யான விஷயத்தை பரப்புவது மிகவும் தவறான செயல் என்பதை ஜோ சொல்லி இருக்கிறார்.

அத்தோடு சூர்யாவின் நடிப்பில் வெளி வர உள்ள கங்குவா திரைப்படம் ரசிகர்களின் மனதில் வெற்றி படமாக அமையும் என்று சொல்லியதோடு அந்த படத்துக்காக சூர்யா ஒரே ஹேர் ஸ்டைலில் இருந்து வருகிறார்.

இது தான் எனக்கு பிடிக்கவில்லை எப்போது முடி வெட்டுவார் என்று தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என ஜோதிகா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது என்பதால் இந்த விஷயம் தெரியாத நண்பர்களுக்கும் ரசிகர்கள் இதை ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version