“இதனால தான் சூரியாவை கல்யாணம் பண்ணேன்..” நடிகை ஜோதிகா சொன்னதை கேட்டீங்களா..?

தமிழ் சினிமாவின் அதிகளவில் வாரிசு நடிகர்கள் இருந்து வருகின்றனர். அதில் குறிப்பிடத்தக்க நடிகர்களாக விஜய், விக்ரம் பிரபு, கௌதம் கார்த்திக், சூரியா, கார்த்தி, ஸ்ருதிஹாசன், வனிதா விஜயகுமார், வரலட்சுமி சரத்குமார், சண்முக பாண்டியன் என பலரை சொல்ல முடியும்.

ஆனால் வாரிசு நடிகர்களாக இருந்தாலும், குறிப்பிட்ட நடிகர்கள் மட்டுமே முன்னணி நடிகர்களாக தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுகின்றனர்.

சூரியா

அந்த வகையில் நடிகர்கள் விஜய், சூரியா, கார்த்தி போன்றவர்கள் டாப் நடிகர்களாக முன் வரிசையில் இருக்கின்றனர். அதில் நடிகர் சூரியா தமிழில் உள்ள முதல் ஐந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

 

நேருக்கு நேர்

இயக்குனர் வசந்த் டைரக்சனில் நேருக்கு நேர் படம் மூலம் அறிமுகமான இவர் இதுவரை 41 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். கடைசியாக வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படம், சூரியாவுக்கு ஏமாற்றத்தை தந்தது. எனினும் அவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்த நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சூரியா, டைரக்டர் பாலா டைரக்சனில் வணங்கான் படத்தில் சில மாதங்கள் நடித்துவிட்டு விலகிவிட்டார். டைரக்டர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியா நடிக்க வேண்டிய வாடிவாசல் படமும் இன்னும் துவங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கங்குவா

சூரியா நடித்த சிறுத்தை சிவா கங்குவா படம் விரைவில் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூரியா ஒரு படத்தில் நடிக்கிறார்.

ஜோதிகா

சூர்யாவை பொருத்தவரை நல்ல நடிகர் என்பது பற்றி மட்டுமின்றி ஜோதிகாவின் கணவராகவும் பார்க்கப்படுகிறார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்த போது இருவருக்கும் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது. திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே என்ற படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இப்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் சைத்தான் படத்தில் நடித்தார். அடுத்து ஸ்ரீகாந்த் என்ற பான் இந்தியா படத்தில் நடிக்க உள்ளார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஜோதிகா, சூரியா ஒரு சிறந்த கணவர். எனக்கு எல்லா விதத்திலும் மதிப்பு கொடுக்கிறார். நான் மீண்டும் நடிப்பதற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருப்பவர் சூரியாதான்.

 

சில காட்சிகளை பார்த்தேன்

சூரியா நடித்துள்ள கங்குவா படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். கண்டிப்பாக பெரிய ஆச்சரியத்தை இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் அடைவார்கள்.

200 சதவீதம்

ஏனென்றால் சூரியா ஒரு அற்புதமான மனிதர். 200 சதவீத உழைப்பை இந்த படத்துக்காக அவர் தந்திருக்கிறார். நான் அவரை திருமணம் செய்து கொண்டதற்கு கூட இதுதான் காரணம் என்று நினைக்கிறேன். சினிமா மட்டும் இல்லாமல் கணவனாகவும், தந்தையாகவும் அனைத்திலும் அவர் 200 சதவீத ஈடுபாட்டை காட்டக் கூடியவர்.

இதுதான் காரணம்

இந்த படத்துக்காக அவர் கொடுத்திருக்கும் உழைப்பை விவரிக்க வார்த்தைகளை இல்லை என்று ஜோதிகா கூறியிருக்கிறார். இப்போது சூரியாவும் ஜோதிகாவும் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
200 சதவீத உழைப்பை, ஈடுபாட்டை தருபவர் சூரியா, நான் சூரியாவை திருமணம் செய்து கொண்டதற்கு இதுதான் காரணம் என்கிறார் நடிகை ஜோதிகா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version