நடிகை ஜோதிகா ( Jyothika ) கடந்த 2015 ஆம் ஆண்டு ’36 வயதினிலே’ படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுக்க தொடங்கிய பின்னர், அதிகப்படியாக பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் குடும்பத்தினரால் திறமை இல்லாத பெண்ணாக பார்க்கப்படும் ஜோதிகா, அவரது திறமையை வெளிக்காட்டி எப்படி தன்னை ஒரு தைரியமான பெண்ணாக வெளிக்காட்டி கொள்கிறார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ‘காற்றின் மொழி’. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஜோதிகா ஒரு ஆர்.ஜே -வாக நடித்திருப்பார்.
பாலிவுட்டில் நடிகை வித்யா பாலன் நடிப்பில் வெளியான, ‘Tumhari Sulu ‘ என்கிற படத்தின் ரீமேக்காக இப்படம் வெளியானது. இந்தப் படத்தில் தன்னுடைய தனித்துவமான நடிப்பில் அசத்தியிருந்தார் ஜோதிகா.
வாலி’, ‘குஷி’, ‘தூள்’ என சினிமா பயணத்தின் முதல் பாதியில் கமர்ஷியல் படங்களின் முன்னணி கதாநாயகியாக அறியப்பட்டவர் நடிகை ஜோதிகா. ஆனால், தனது இரண்டாம் பாதியில் கதாநாயகர்களுக்கு இணையாக கதை தேர்விலும், கதாபாத்திரங்களிலும் முன்னணியில் இருக்கிறார்.
‘சந்திரமுகி’ திரைப்படம் ஜோதிகாவின் சினிமா பயணத்தில் நிச்சயம் மறக்க முடியாத ஒன்று. முதலில் அந்த படத்தில் அவரது கதாப்பாத்திரத்திற்கு நடிக்க தேர்வானவர் நடிகை சிம்ரன். ‘சந்திரமுகி’ கதாபாத்திரத்தின் நளினத்திற்காகவும், பரத நாட்டியம் ஆடத்தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த படத்தின் இயக்குநர் வாசு, சிம்ரனை தேர்வு செய்தார்.
ஆனால், சில காரணங்களால் சிம்ரனால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போக பின்பு ஜோதிகா உள்ளே வந்தார். இப்படி தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த ஜோதிகா நடிகர் சூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஒல்லியா இருந்தா தான் ஹீரோயினா…?
சினிமா என்றாலே ஒல்லியான நடிகைகள் தான் முன்னணி ஹீரோயின் ஆக முடியும் என நம்பிக்கையை சுக்கு சுக்காக உடைத்தவர் ஜோதிகா. தன்னுடைய கொளுக்மொளுக் அழகால் உச்சத்திற்கு சென்ற ஜோதிகா, சினிமாவில் அறிமுகமான புதிதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க நீச்சல் உடையிலும் நடித்துள்ளார்.
அந்த வகையில், தனது பதின்ம வயதில் நீச்சல் உடையில் தோன்றிய ஜோதிகாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.