கங்குவா படம் எப்படி இருக்கு..? முதன் முறையாக பிரபல நடிகை விமர்சனம்..!

தெனிந்த சினிமாவின் பெறும் புகழ் பெற்ற இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிறுத்தை சிவா. இவரது இயக்கத்தில் வெளிவந்த சிறுத்தை திரைப்படம் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்று மாபெரும் ஹிட் அடித்தது.

2011 ஆம் ஆண்டில் வெளிவந்த இப்படம் நடிகர் கார்த்தி மற்றும் தமன்னாவுக்கு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது.

சிறுத்தை சிவா:

இப்படத்தை சிறுத்தை சிவா வித்யாசமான கண்ணோட்டத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகள் கொண்டு பரபரப்பாக இயக்கி இருந்தார்.

இந்த படம் தெலுங்கு சினிமாவிலும், தமிழ் சினிமாவிலும் மாபெரும் அளவுக்கு ஹிட் அடித்த படமாக முத்திரை பதித்தது.

அந்த படத்தின் மூலம் சிவாவுக்கு ஒரு மிகப்பெரிய அடையாளம் ஏற்பட தன்னுடைய பெயருக்கு முன்னால் “சிறுத்தை” சிவா என்கிற அளவுக்கு அந்த படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது.

அதன் பிறகு நடிகர் அஜித்தை வைத்து “வீரம்” படத்தை இயக்கினார் அந்த படமும் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்தது.

அஜித்துடன் தொடர் வெற்றி:

அஜித் குமாரை வித்தியாசமான கண்ணோட்டத்தில் அந்த படத்தில் பார்க்க முடிந்தது. அஜித் ரசிகர்களுக்கு குறிப்பாக அந்த திரைப்படம் இன்றும் பேவரைட் திரைப்படமாக இருந்து வருகிறது.

தொடர்ந்து வேதாளம், விவேகம், விசுவாசம் என அடுத்தடுத்து அஜித்தை வைத்து கிட்டத்தட்ட நான்கு படங்களை இயக்கியதால் இவர்கள் கூட்டணி தொடர்ந்துக்கொண்டே இருந்தது.

சிவா மீண்டும் அஜித்தை வைத்து படம் எடுக்கப் போகிறாரா எனக்கு கிண்டலாக பேசி வந்த நிலையில் தற்போது புதுவிதமாக வேறொரு ஹீரோவான நடிகர் சூர்யாவை வைத்து “கங்குவா” எனும் பிரம்மாண்ட திரைப்படத்தை எடுத்து வருகிறார்.

கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் சூர்யா வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருப்பது கடந்த மாதம் வெளியான டீசரின் மூலம் தெரிய வந்தது.

ரூ. 300 பிரம்மாண்ட படம்:

இப்படத்தில் சூர்யா வித்தியாசமான ரோலில் அதிரடியான ஆக்சன் காட்சிகளில் நடிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார்.

இவர்களுடன் படத்தில் யோகி பாபு ,ஆனந்த்ராஜ் நடித்திருக்கிறார்கள் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாய் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இப்படம் தமிழ் மட்டுமல்லாமல் கிட்டதட்ட 10 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

விரைவில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

இப்படியான நேரத்தில் சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படம் குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறார்.

கங்குவா படம் குறித்து ஜோதிகா:

அதாவது நான் கங்குவா படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். மிகவும் பிரமிப்பாகவும் பிரம்மாண்டமாகவும் இருந்தது.

குறிப்பாக சினிமா உலகமே சினிமா ரசிகர்கள் முதல் ஒரு வித்தியாசமான ஒரு புதிய அனுபவத்தை இந்த படத்தின் மூலம் பெறப் போகிறார்கள் என ஜோதிகா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கங்குவா படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version