ஜோதிகா குறித்து பலரும் அறிந்திடாத அதிர்ச்சி தகவலை பதிவு செய்த மாமனார் சிவக்குமார்..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை ஜோதிகா மற்றும் சூர்யா குறித்து பிரபல நடிகரும் சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் பலரும் அறியாத அதிர்ச்சி தகவல் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். பொதுவாகவே பிரபலங்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடுமே திருமணக்கோலத்தில் முழ்கும்.

அவருடைய ரசிகர்களின் மனநிலையும் அப்படியே இருக்கும். அந்த வகையில், ஆரம்ப காலத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்து வந்த நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா ஒரு கட்டத்தில் பரஸ்பரம் காதலிக்க தொடங்கினார்கள்.

ஆனால் நடிகை ஜோதிகாவை வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரு காரணத்திற்காக நடிகர் சூர்யாவின் தாய் இந்த திருமணத்தை கடுமையாக எதிர்த்து வந்தார். பல பிரச்சனைகள் ஒருவருடைய வீட்டில் நடந்திருக்கிறது.

இதனை இவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களே பல இடங்களில் சொல்லி இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் சிவகுமார் தற்போது தன்னுடைய அனுபவத்தை பேசியிருக்கிறார்.

அவர் பேசியதாவது, நடிகை ஜோதிகா என் மகன் சூரியாவை திருமணம் செய்துகொள்ள நான்கு வருடங்கள் காத்திருந்தார் என்று அதிர்ச்சி தகவல் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். மேலும், நான் 190 படங்களில் நடித்து இருக்கிறேன். 150 படத்தில் நிச்சயம் ஏதாவது ஒரு காதல் காட்சியில் நடித்து இருப்பேன் 150 படத்தில் காதல் மற்றும் அதற்கு ஆதரவாக இருக்கும் கருத்துக்களை பேசியிருப்பேன்.

இப்படி நான் படத்தில் நடிக்க கூடிய அனைத்து நடிகைகளையும் நான் காதலிப்பது போல நடித்து இருக்கிறேன் இன்னும் சொல்லப்போனால் அந்த 150 பேரையும் நான் காதலித்தாக தான் அர்த்தம்.

ஆனால், சூர்யா ஒரே ஒரு பெண்ணை காதலித்து.. அவளையே திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லும் போது எப்படி வேண்டாம் என்று சொல்வது. அது எப்படி தர்மமாக இருக்கும். அதனால் நான் அவருடைய திருமணத்திற்கு உடனடியாக சம்மதம் தெரிவித்து விட்டேன். அவர்கள் வாழ நினைக்கும் வாழ்க்கையை வாழ அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.

அதற்கு நாம் எந்த விதத்திலும் கிடங்கு இடையூறாக இருக்கக்கூடாது. என்னுடைய குடும்பத்தில் சில சலசலப்புகள் ஆரம்பத்தில் இருந்தன. ஆனால் அவை எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. 2006ஆம் ஆண்டு ஜோதிகாவை கரம்பிடித்தார் நடிகர் சூர்யா அதன்பிறகு அவருடைய அன்புக்கு பாத்திரமாக தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam