சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பல நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். மும்பையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த ஜோதிகாவிற்கு முதன்முதலாக வாய்ப்பை கொடுத்தவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யா.

எஸ் ஜே சூர்யா இயக்கிய வாலி திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ஜோதிகா. ஆனாலும் அது முக்கியமான கதாபாத்திரமாக இருந்ததால் அதனை தொடர்ந்து ஜோதிகாவிற்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

சூர்யாவுடன் படம்:

அதனை தொடர்ந்து சூர்யாவிற்கு ஜோடியாக பூவெல்லாம் கேட்டு பார் திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் பெரும் வெற்றியை கொடுத்தது. அந்த படத்தை தொடர்ந்து முகவரி என்று நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஜோதிகா.

பெரும்பாலும் ஜோதிகா நடிக்கும் படங்கள் தமிழில் வெற்றி படங்களாகவே அமைந்திருக்கின்றன. அதனால் ராசியான கதாநாயகி என்று கூறி நிறைய திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்புகளை கொடுத்து வந்தனர்.

பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்த பொழுது சூர்யாவிற்கும் ஜோதிகாவிற்கும் இடையே காதல் இருந்ததாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தாலும் உண்மையில் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பில் தான் அவர்களுக்கு காதல் ஏற்பட்டதாக ஜோதிகாவே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஜோதிகா காதல்:

சூர்யா மற்றும் ஜோதிகாவின் காதலை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே திருமணம் நடந்தது. அதனை தொடர்ந்து சூர்யாவின் வீட்டில்தான் பல காலங்களாக வாழ்ந்து வந்தார் ஜோதிகா. ஆனால் கொரோனா சமயத்திற்கு பிறகு மும்பையில் வீடு வாங்கி அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் ஜோதிகா.

இது குறித்து அவர் பேட்டியில் கூறும் பொழுது மும்பை தனது குழந்தைகள் வளர்வதற்கு நல்ல இடமாக இருப்பதாகவும் அங்கு பிரபலத்தின் குழந்தைகளாக அவர்களை யாரும் பார்ப்பதில்லை என்றும் கூறுகிறார் ஜோதிகா.

மேலும் கொரோனா சமயத்தில் தனது தாய் தந்தையரை சென்று பார்ப்பதே கடினமாகிவிட்டதால்தான் மும்பையில் வீடு வாங்கி இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இந்த நிலையில் உண்மையில் ஜோதிகா மும்பையில் வீடு வாங்கியதற்கு அவரிடம் இருக்கும் சொத்துக்களே காரணம் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் சொத்துக்களை பொறுத்தவரை சூர்யாவிடம் இருக்கும் சொத்தின் மதிப்பு 200 கோடி என்றும் அவரது மனைவி ஜோதிகாவின் சொத்து மதிப்பு 330 கோடி என்றும் கூறப்படுகிறது. சூர்யாவை விட பணக்காரியாக ஜோதிகா இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஜோதிகாவின் அதிகமான சொத்துக்கள் மும்பையில் தான் இருக்கிறது என்பதால்தான் அவர் மும்பையில் வீடு வாங்கி இருக்கிறார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. அதனை தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் தற்சமயம் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஜோதிகா

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version