தோல் நிறத்தில் பேண்ட்.. இணையத்தை அதிர வைக்கும் நடிகை ஜோதிகா.. வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவுக்கு நல்ல நடிகைகளின் வருகை என்பது மிக குறைவாக தான் இருக்கிறது. கவர்ச்சி காட்டினால் எப்படியும் ஒரு பத்து ஆண்டுகளை திரையுலகில் ஓட்டி விடலாம் என்ற எண்ணத்தில் சினிமாவுக்குள் வருபவர்களும் இருக்கின்றனர்.

ஆனால் நல்ல நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி சில படங்களில் நடித்தாலும், ரசிகர்களின் மனதில் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நடிக்க வரும் நடிகைகளும் சிலர் இருக்கவே செய்கின்றனர்.

ஜோதிகா

அந்த வகையில் நடிகை ஜோதிகா, தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக அற்புதமான நடிகை. எந்தமாதிரியான நடிப்பு என்றாலும், அவருக்கு அல்வா சாப்பிடுவது போல தான்.

குறிப்பாக சந்திரமுகி, மொழி, குஷி, காக்க காக்க, சில்லுன்னு ஒரு காதல் போன்ற படங்களில் பல காட்சிகளில் ஜோதிகாவின் நடிப்பில் தனித்துவம் தெரியும். அதுபோன்ற அழுத்தமான நடிப்பை சில நடிகைகளால் மட்டுமே வெளிப்படுத்த முடியும்.

திருமணத்துக்கு பின்…

முன்னணி நடிகர்களுடன் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு நடிக்க வில்லை. ஆனால் மீண்டும் 36 வயதினிலே படத்தில் நடிக்க துவங்கிய ஜோதிகா, பிறகு குறிப்பிட்ட கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார்.

சைத்தான் வெற்றி

சென்னையில் இருந்தால், அவரது நடிப்புக்கு சிவக்குமார் குடும்பத்தினர் தடையாக இருப்பதால், ஜோதிகா குடும்பத்துடன் மும்பையில் குடியேறிவிட்டார். இப்போது அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா நடிப்பில் வெளிவந்த சைத்தான் படம் மும்பையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

தொடர்ந்து இந்தி படங்களில், வெப் சீரிஸ்களில் நடிக்க ஜோதிகாவுக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அதே போல் சூர்யாவும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

உடற்பயிற்சி கூடங்களில்…

சமீபமாக காலமாக நடிகை ஜோதிகாவின் வீடியோக்களும், புகைப்படங்களும் அதிக அளவில் வைரலாகி வருகின்றன. ஆனால் அவை அவர் நடிக்கும் சினிமா படங்கள், கலந்துக்கொண்ட சினிமா நிகழ்ச்சிகள், குடும்ப விழாக்கள், பயண நேரங்களில் எடுக்கப்பட்டதோ அல்ல. அவை பெரும்பாலும் உடற்பயிற்சி கூடங்களில் எடுக்கப்பட்டதாக தான் இருக்கின்றன.

இதையும் படியுங்கள்: அபர்ணா தாஸ் திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

2 பிள்ளைகளுக்கு தாயான நிலையில்…

வயது 40 களை கடந்த நிலையில் 2 வளர்ந்த பிள்ளைகளுக்கு தாயாகி விட்ட நடிகை ஜோதிகா, இந்த வயதில் எதற்காக இவ்வளவு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான், இதை பார்க்கும் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

தோல் நிறத்தில் டைட் பேண்ட்

அதுவும் ஆண்களே செய்வதற்கு தயங்கும்படியாக மிக கடுமையான பல உடற்பயிற்சிகளை அவர் அசுர வேகத்தில் செய்வதை பார்த்தால், பார்ப்பவர்களுக்கே அதிர்ச்சியில் வியர்த்து கொட்டிவிடும்போல இருக்கிறது.

இதையும் படியுங்கள்: வடிவேலுவின் அத்தை மகள்.. பழைய நினைவுகளுடன் வேதனை பேட்டி..!

அதுவும் தோல் நிறத்தில் டைட் பேண்ட் போட்டுக்கொண்டு வியர்க்க, விறுவிறுக்க உடற்பயிற்சி செய்து இணையத்தை அதிர வைக்கிறார் நடிகை ஜோதிகா.

வைரல் போட்டோஸ் பார்த்து, ஜோதிகா ஷூட்டிங்கில் நடிக்கப் போறாரா, அத்லெட்டிக் போட்டிகளில் ஏதும் கலந்துக்கப் போறாரா என கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version