ப்பா.. வியர்க்க வியர்க்க வெறித்தனமான வொர்க்அவுட்.. தீயாய் பரவும் ஜோதிகாவின் வீடியோ..

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு அற்புதமான நடிகையாக இருந்தார். பல படங்களில் அவரது நடிப்பு தனித்துவமாக இருந்தது. அதனால் அவரை ரசிகர்கள் கொண்டாடினார்கள். பல முன்னணி நடிகர்கள், ஜோதிகாவுடன் நடிக்க ஆசைப்பட்டார்கள்.

சந்திரமுகி

குறிப்பாக கடந்த 15, 20 ஆண்டுகளாக ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் படத்தின் பெயர் அவரது பெயராக தான் இருக்கும்.

குறிப்பாக பாட்ஷா, முத்து, படையப்பா, அண்ணாமலை, அருணாசலம், காலா, கபாலி, பேட்ட அண்ணாத்த, ஜெயிலர் வரை அப்படிதான் தொடர்கிறது. இனி வரப்போகும் வேட்டையன் வரை.

ஆனால் பி வாசு இயக்கத்தில் எடுக்கப்பட்ட படத்துக்கு சந்திரமுகி என, ஜோதிகா நடித்த கேரக்டர் பெயரை வைக்க ரஜினிகாந்த் சம்மதிக்க காரணம், அந்த சந்திரமுகி கேரக்டரும், அதில் கேரக்டரில் நடித்த ஜோதிகாவும்தான்.

ஜோதிகா

படம் முழுக்க அமைதியாக இருந்துவிட்டு, கடைசி 15 நிமிடங்களில் ஜோதிகாவின் நடனமும், நடிப்பும், பாவனைகளும், கோபமும், ஆவேசமும் என அந்த நடிப்புக்கு எத்தனை விருதுகளை அள்ளிக் கொடுத்தாலும் இணையாகாது.

இதையும் படியுங்கள்: கூவத்தூருக்கு வந்து நடிகைகள் பட்டியல்.. இவர் வாயை திறந்தால் அவ்ளோ தான்.. பகீர் கிளப்பும் நடிகர்..!

வழக்கமாக விஜய், அஜீத், சூர்யா, சியான் விக்ரம் போன்றவர்களுடன் காதல் நடிப்பை வெளிப்படுத்தி, டூயட்களில் ஆடிக்கொண்டிருந்த ஜோதிகா, சந்திரமுகி படத்தில்தான், தனது நடிப்பின் பரிமாணத்தை ரசிகர்களுக்கு உணர்த்தினார் என்றே சொல்ல வேண்டும்.

சூர்யாவை திருமணம் செய்த பின்பு, குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட ஜோதிகா 2 குழந்தைகளுக்கு தாயானார். பிறகு மீண்டும் நடிப்பில் தனது ஆர்வத்தை காட்டத் துவங்கினார்.

மொழி படத்தில்

ராதா மோகன் இயக்கத்தில் மொழி படத்தில் வாய் பேசாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி கேரக்டரில், கண்களால் பேசி நடித்த ஜோதிகாவின் நடிப்பு, ரசிகர்களை திகைக்க வைத்தது.

அதன்பிறகு 36 வயதினிலே, மகளிர் மட்டும், ஜாக்பாட், நாச்சியார், ராட்சசி என தொடர்ந்து நடித்து, ரசிகர்களிடம் மீண்டும் வரவேற்பை பெற்றார்.

இதையும் படியுங்கள்: டூ பீஸ் நீச்சல் உடையில் மீனா.. இந்த உடம்பை வச்சிகிட்டு இப்படியா.. குவியும் லைக்குகள்.. வைரல் வீடியோ..

மலையாளத்தில் மம்முட்டியுடன்…

சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டியுடன் அவர் நடித்த காதல் தி கோர் படமும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து படங்களில் அதிக ஆர்வமாக இருந்து வருகிறார் ஜோதிகா.

இப்போது குடும்பத்துடன் மும்பையில் குடியேறியுள்ள ஜோதிகா, 2 பிள்ளைகளின் தாய், 40 வயதுகளை கடந்தவர் என்ற எண்ணமே சிறிதும் இன்றி, ஆண்களை விடவும் வெறித்தனமாக ஜிம்மில் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

வெறித்தனமான வொர்க் அவுட்

பலசாலியான ஆண்கள் கூட செய்யத் தயங்கும் பல கடுமையான உடற்பயிற்சிகளை சாதுவான முகத்துடன், அதிக வேகத்துடன் செய்கிறார்.

ப்பா.. வியர்க்க வியர்க்க வெறித்தனமான வொர்க் அவுட் செய்யும் ஜோதிகாவின் வீடியோ தீயாக பரவுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version