இதனால் தான் ஓட்டு போட வரல.. ஜோதிகா பதிலால் கடுப்பில் ரசிகர்கள்..!

நடிகை ஜோதிகா, நடிகர் சூரியாவின் மனைவி. ஜோதிகா திருமணத்திற்கு முன் பல வெற்றி படங்களில் நடித்தவர். முன்னணி நாயகர்கள் கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், மாதவன், சூரியா, சியான் விக்ரம் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். முன்னணி நடிகையாக இருந்தவர்.

ஜோதிகா

சூரியாவை திருமணம் செய்த பிறகு, சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். பிறகு 2015 ஆம் ஆண்டில் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். 36 வயதினிலே என்ற படம் மூலம் இரண்டாவது சுற்றை ஆரம்பித்த ஜோதிகா, தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து அந்த படங்களை மட்டுமே நடிக்கிறார்.

தமிழில் மட்டுமின்றி மலையாளம், இந்தி என பிறமொழிப் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

காதல் தி கோர்

சமீபத்தில் மலையாளத்தில் இவர் மம்முட்டியுடன் நடித்த காதல் தி கோர், அதேபோல் இந்தியில் அஜய் தேவ்கன், மாதவன் நடித்த சைத்தான் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக ஜோதிகாவுக்கு அமைந்தன.

இதைத்தொடர்ந்து தற்போது, ஜோதிகா மீண்டும் இந்தியில் ஸ்ரீகாந்த் என்ற படத்தில் நடிக்கிறார். பான் இந்தியா படமாக உருவாக உள்ள இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் ஜோதிகா ஆர்வமாக பங்கேற்று வருகிறார்.

ஸ்ரீகாந்த்

ஸ்ரீகாந்த் படத்தின் தமிழ் வெர்ஷனுக்கான செய்தியாளர்கள் சந்திப்பில், ஜோதிகா கலந்து கொண்டார். அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஜோதிகா பதில் அளித்தார்.

ஓட்டு போட வரல…

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஓட்டு போட நீங்கள் வராது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, நான் தொடர்ந்து ஓட்டு போட்டு வருகிறேன். சில நேரங்களில், வேலைக்காக வெளியில் செல்வதால் என்னால் ஓட்டு போட வர முடியவில்லை. சில நேரங்களில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும். இதெல்லாம் தனிப்பட்ட விஷயம், அதற்கு மதிப்பளியுங்கள் என்று கூறினார்.

யாரும் கேட்கல…

நிறைய சமூக கருத்துகளை சொல்லும் கதைகளை தேர்வு செய்து நடிக்கும் நீங்கள், ஏன் அரசியலுக்கு வரவில்லை? அரசியலுக்கு வரும் திட்டம் எதுவும் இருக்கிறதா, என்ற கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, என்னை அரசியலுக்கு வர சொல்லி யாருமே கேட்கவில்லை என்றார்.

அரசியலுக்கு வாய்ப்பே இல்லே

ஏதேனும் கட்சியில் இருந்து அழைப்பு வந்தால் சேருவீர்களா என்று கேட்ட போது, இப்போதைக்கு அப்படி ஒரு பிளான் இல்லை, எ ன்னுடைய இரண்டு மகன்களும் இப்போது படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உடல் பிட்னஸ் முக்கியம்

அவர்களுக்கு பொதுத்தேர்வு இருக்கிறது. எனக்கு அந்த வேலையே போதுமானதாக உள்ளது. இப்போதைக்கு உடல் பிட்னஸில் தான் கவனம் செலுத்தி வருகிறேன். அதனால் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்று ஓப்பனாக கூறிவிட்டார்.

வேலை காரணமாக, நான் ஓட்டு போட வரவில்லை என்ற ஜோதிகா பதிலால் கடுப்பில் ரசிகர்கள், ஜனநாயக கடமையை செய்ய வர முடியலை. அப்புறம் எதுக்கு பெரிய புரட்சி கருத்து எல்லாம் பேசறீங்க, மணிக்கணக்குல ஜிம்ல ஒர்க் அவுட் பண்றதுக்கும், அதை வீடியோ எடுத்து போடறதுக்கு மட்டும் நேரம் இருக்குதா, என எகிறி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version