அக்கா ஹெலிகாப்டர்லதான் ஷூட்டிங் போவா.. கப்பலும் இருந்தது.. கே.ஆர்.விஜயாவின் சகோதரி சொன்னதை கேட்டீங்களா..?

தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த கே.ஆர் விஜயா பற்றி உங்களுக்கு அதிகளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவரின் சகோதரி கே.ஆர் வஸ்தலா கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது அக்கா பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பேசப்படுவதோடு மட்டுமல்லாமல் கே.ஆர் விஜயாவிற்கு ஹெலிகாப்டர், கப்பல் இருந்ததா? என்ற ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை கே.ஆர் விஜயா..

தமிழ் திரையுலகில் டாப் ஹீரோயினியாக இருந்த கே ஆர் விஜயா ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்ததை அடுத்து திரைப்படத்தில் நடிப்பதற்காக தனது பெயரை நடிகவேள் கே.ஆர் விஜயா என்று மாற்றி வைத்ததாக கூறியிருக்கிறார்.

இந்நிலையில் கே.ஆர் விஜயா பற்றி அடிக்கடி வதந்தியான செய்திகள் இணையங்களில் வெளி வருவதாகவும், அது போன்ற செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என அவருடைய சகோதரி கே.ஆர் வஸ்தலா கேட்டுக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்தப் பேட்டியில் தன் அக்கா வீட்டை விற்றி விட்டார்கள். மேலும் அவர் மரணம் அடைந்து விட்டார் என்று பல்வேறு விதங்களில் செய்திகள் வெளி வருகிறது. ஆனால் என் அக்கா உடற்பயிற்சி பூஜை, புனஸ்காரம் என மிகவும் சிறப்பாக இருக்கிறார்.

ஹெலிகாப்டர் ல தான் ஷூட்டிங் போவா..

இது போன்ற விஷயத்திற்கு எல்லாம் என் அக்கா கவலைப்பட மாட்டார். அது மட்டுமல்லாமல் உணவு விஷயத்திலும் கோயில் செல்வது பற்றி தான் நாங்கள் இருவரும் பேசிக் கொள்வோம். குறிப்பாக என் அக்கா 50-க்கும் மேற்பட்ட சாம்பர்களை வைக்கக்கூடிய திறமை கொண்டவர்.

இவர் ஷூட்டிங் செல்வதற்காக விமானம் வைத்திருந்தார். அது மட்டுமல்லாமல் நான்கு கப்பல்களையும் சொந்தமாக வைத்திருந்தார் என சொல்லி இருக்கிறார்.

தெய்வநாயகி என்ற பெயரில் பிறந்த நடிகை கே.ஆர் விஜயா புன்னகை அரசி என்ற அடை மொழியோடு ரசிகர்களால் அழைக்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் நடித்து இருக்கிறார்.

கே.ஆர் விஜயாவின் சகோதரி பேச்சு..

அது மட்டுமல்லாமல் இவர் 1966-ஆம் ஆண்டு தொழிலதிபரான வேலாயுதத்தை திருமணம் செய்து கொண்டார். இவரும் தமிழில் 88-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார்.

அடுத்த அதிகபட்சமான படங்களில் கே.ஆர் விஜயா நடித்து 75% மேல் உள்ள படங்கள் வெற்றியைப் பெற்று தந்ததை அடுத்து ஏராளமான சொத்து சுகத்துடன் கே.ஆர் விஜயா குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறார். எனவே அவர் வீட்டை விற்று விட்டதாகவும், இறந்து விட்டதாகவும் வதந்திகள் பரவுவது ஏன் என தெரியவில்லை.

எனவே இனி மேல் இது போன்ற வதந்திகளை பரப்பாமல் இருந்தால் நல்லது என கே.ஆர் விஜயாவின் சகோதரி கேட்டுக் கொண்ட விஷயமானது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு அனைவரும் பேசும் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயத்தை ரசிகர்கள் அனைவரும் தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதோடு கே. ஆர் விஜயா பற்றிய பெருமையாக பேசி வருவதோடு மட்டுமல்லாமல் அம்மன் வேடத்திற்கு கே.ஆர் விஜயாவை போல வேறு யாரும் செட்டாகவில்லை என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version