தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் K R விஜயா பல படங்களில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் கேரள மாநிலத்தில் இருக்கும் திருவனந்தபுரத்தில் தான் பிறந்தவர். ஆரம்ப நாட்களில் கேரளாவில் இருந்து பழனிக்கு அவர்களது குடும்பம் நாடகங்கள் போடுவதற்காக வரும் போது அந்த நாடகங்களில் இவர் நடித்திருக்கிறார்.
இதனை அடுத்து இவர் 1963 ஆம் ஆண்டு வெளி வந்த கற்பகம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார்.
இதனை அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்த இவர் எண்பதுகளில் பல படங்களில் அம்மன் வேடம் போட்டு நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார்.
இதனை அடுத்து டிவி தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் இவர் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். இது வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
எப்படிப்பட்ட கேரக்டர் ரோல் தந்தாலும் அந்த கேரக்டரை சிறப்பாக செய்வதில் கை தேர்ந்தவர், இவரது நடிப்பு திறமையை பாராட்டி பல விருதுகள் இவருக்கு கிடைத்துள்ளது.
குடும்ப பாங்கான வேடமாக இருந்தாலும் சரி கவர்ச்சிகரமான ரோல் என்றாலும் எல்லா வேடங்களுக்கும் பொருந்தும் படி இவரது நடிப்பு இருக்கும்.
சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே திருமணம் செய்து கொண்ட கே ஆர் விஜயா கணவரின் ஆதரவால் தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி அடைந்திருக்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டில் கணவரை இழந்த கே ஆர் விஜயா தற்போது படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது இவரது மகளின் புகைப்படமானது இணையதளத்தில் வெளி வந்து ட்ரெண்டிங் ஆகிவிட்டது. இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அட இது கே ஆர் விஜயாவின் மகளா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.
அம்மாவைப் போலவே இவருக்கும் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்த போதும் நடிப்பில் பெரிதும் விருப்பம் இல்லாத இவரது மகள் படித்து மிகச் சிறந்த வேலையில் பணியாற்றி வருகிறார்.
அம்மாவைப் போலவே அழகில் அம்சமாக இருக்கக்கூடிய கே ஆர் விஜயாவின் மகள் ஹேமலதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இந்த போட்டோவை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் எந்த புகைப்படத்தையும் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்