என் கணவர் இறந்துட்டாரு.. ஆனாலும்.. பூவும் பொட்டும் வைக்க காரணம்..! கே.ஆர்.விஜயா கண்ணீர்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகள் பலவற்றில் சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் புன்னகை அரசி கே ஆர் விஜயா அண்மை பேட்டியில் பேசிய சில விஷயங்களை இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

நடிகை கே ஆர் விஜயா கேரளாவில் இருக்கும் திருச்சூரில் பிறந்த இவரது இயற்பெயர் தெய்வநாயகி என்பதாகும். திரை உலகில் நடிக்க வந்த புதிதில் இவரது பெயரை எம் ஆர் ராதா கே ஆர் விஜயா என்று மாற்றி வைத்ததை அடுத்து திரையுலகில் நட்சத்திரமாக ஜொலிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

நடிகை கே ஆர் விஜயா..

தமிழ் திரை உலகில் கற்பகம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பினை பெற்றார். 

அத்துடன் அன்றைய தமிழ் முன்னணி திரைப்பட நடிகர்களாக திகழ்ந்த எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன் போன்ற ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

மேலும் இவர் நடித்த சிறந்த திரைப்படங்களாக அவள் சுமங்கலி தான் ஊட்டி வரை உறவு, கண்ணே பாப்பா, கை கொடுத்த தெய்வம், தங்கப்பதக்கம், தசாவதாரம், திரிசூலம், பஞ்சவர்ணக்கிளி, விவசாயி போன்ற படங்கள் இவரது பெயரை சொல்லும் படி உள்ளது.

அந்த காலத்தில் அம்மன் கேரக்டர் ரோல்களை அதிகளவு செய்து இவர் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று பெயரை பெற்றுக் கொண்டதை அடுத்து திரை உலகில் பீக்கில் இருக்கும் போதே திரைப்பட தயாரிப்பாளர் வேலாயுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஹேமலதா என்ற ஒரு பெண்ணும் இருக்கிறார்.

என் கணவர் இறந்தாலும் போகும் பொட்டும் வைக்க காரணம்..

திருமணம் ஆகி செட்டிலான பிறகும் திரை உலகில் நடிக்கக்கூடிய நடிகையாக திகழ்ந்த கே ஆர் விஜயாவை திரைப்படங்களில் நடிப்பதற்கு அவரது கணவர் ஊக்கப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் கண்டிப்பாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு நடிக்க வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தி இருக்கிறார்.

ஆனால் குழந்தை பிறக்கு நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்த இவர் கணவரின் தூண்டுதல் காரணமாகத் தான் தொடர்ந்து பல திரை உலகத்தில் நடித்து வந்தார்.

மேலும் கணவன் இறந்த பிறகும் அவரது சொல்லுக்கு ஏற்ற படி வாழ்ந்து வந்த நடிகை கே ஆர் விஜயா பூவும் பொட்டும் இன்றும் வைக்க காரணம் தனது கணவர் தான் என்பதை கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார்.

கண் கண்ட தெய்வமாக கணவனை நினைத்து வாழ்ந்து வந்த கே ஆர் விஜயா அந்தக் காலத்தில் பெரும் செல்வத்தையும் செல்வாக்கையும் பெற்ற நடிகைகளில் ஒருவராக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் தனக்கு படிப்பறிவு இல்லை என்றாலும் கணவனின் துணை கொண்டு பல சாதனைகள் புரிந்திருக்கிறார்.

கே ஆர் விஜயாவின் ஓபன் டாக்..

மேலும் தொடர்ந்து ஒரே ஆண்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து படு பிஸியான நடிகையாக வலம் வந்த இவர் பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்.

ஆரம்பத்தில் நடிக்க வந்த போது கவர்ச்சி காட்டி நடித்து இருந்தாலும் ஒரே நாளில் நான்கு ஐந்து திரைப்படங்களில் நடித்து கேப்பே விடாமல் பம்பரமாக சுற்றி திரிந்ததோடு மட்டுமல்லாமல் சினிமா வாழ்க்கை தான் தனக்கு அனைத்தையும் கற்றுத் தந்தது என்று பகிர்ந்திருக்கிறார்.

இதனை அடுத்து கே ஆர் விஜயாவின் இந்த பேட்டி ரசிகர்களின் மத்தியில் காட்டு தீ போல பரவி வருவதோடு மட்டுமல்லாமல் தன் கணவர் சொன்ன வார்த்தைக்காக இன்று வரை பொட்டு பூவை வைத்து வருவது பற்றி பேசியது அவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version