அந்த காலத்தில் சினிமா இப்படி இருந்துச்சு.. ஆனா இப்போ.. நடிகை KR விஜயா வேதனை..!

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய பட மொழிகளில் ஏறக்குறைய 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் இன்று வரை நிலையான இடத்தை பிடித்திருக்கும் நடிகை KR விஜயா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர் கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் தெய்வநாயகி. திரைப்படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய பெயரை கே ஆர் விஜயா என்று மாற்றி வைத்துக் கொண்டார். இதனை அடுத்து இவர் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள பழனிக்கு குடி பெயர்ந்தார்.

நடிகை கே ஆர் விஜயா..

நடிகை கே ஆர் விஜயா ஆரம்ப நாட்களில் நாடக குழுவிலும் சில மேடை நாடகங்களிலும் நடித்த பிறகு இவருக்கு எம் ஆர் ராதா தான் விஜயா என்ற பெயரை வைத்ததோடு திரை உலகில் நடிக்கக்கூடிய ஆசையையும் ஏற்படுத்தியவர்.

1960-களில் நடிக்க ஆரம்பித்த இவர் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படத்துறையில் மிகச் சிறந்த முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் நடிப்பு 1963 கற்பகம் என்ற தமிழ் திரைப்படம் வெளி வந்தது.

இவர் தமிழில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன், முத்துராமன், ஏவிஎம் ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்ற பல நடிகைகளோடு ஜோடி போட்டு நடித்ததோடு மட்டுமல்லாமல் வில்லன் கேரக்டர்களை செய்த ஆர்எஸ் மனோகர், எஸ்ஏ அசோகன், கே பாலாஜி ஆகியோரோடும் இணைந்து  கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

அந்த காலத்துல சினிமா இப்படி இருந்துச்சு..

புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கே ஆர் விஜயா திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை நாடகங்களிலும், விளம்பரங்களிலும் நடித்தவர்.

மேலும் 1966 பிரபல தயாரிப்பாளரும் தொழிலதிபருமான சுதர்சன் எம் வேலாயுதம் நாயர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் இவர் தமிழ் சினிமாவின் தரம் தற்போது எப்படி உள்ளது என்பதை மிக நேர்த்தியான முறையில் கூறி இருக்கிறார்.

அதில் அவர் பேசும்போது அந்த காலத்தில் எடுக்கப்பட்ட சினிமாவிற்கு கதை ஒரு முக்கிய கருவாக அமைந்திருந்தது.

அதில் குறிப்பாக  கதையில் ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் அந்த குழந்தை வளர்ந்து திருமணம் செய்து இறுதி வரை என்னென்ன நடக்குமோ அத்தனையும் மிக நேர்த்தியான முறையில் படம் பிடிக்கப்பட்டு ரசிகர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.

ஆனால் இன்றைய சினிமா அப்படியா உள்ளது. இன்றைய சினிமாவின் கதைக்களம் முற்றிலும் மாறி போய் உள்ளது என்று நடிகை கே ஆர் விஜயா கூறியிருக்கிறார்.

ஆனா இப்போ.. கே ஆர் விஜயா வேதனை..

மேலும் அவர் அந்த காலத்தில் சினிமாவை உயர்வாக சொன்னதோடு மட்டுமல்லாமல் அன்று நடிப்பதற்கு ஒரு நிலையான தகுதி வேண்டும். ஆனால் இப்படி அல்ல. ஒரு மவுண்ட் ரோட்டில் ஒரு பேருந்து செல்கிறது என்றால் அந்த பேருந்துக்குள் நடப்பதை தான் கதையாக சித்தரிக்கிறார்கள்.

எனவே அந்த அளவிற்கு நடிப்பையோ, வசனத்தையோ பேச  வேண்டிய அவசியம் இருக்காது. அப்படித் தான் இன்றைய சினிமாக்களின் கதைகள் உள்ளது என்று கே ஆர் விஜயா பேசிய பேச்சானது இணையத்தில் வைரலாக மாறியுள்ளது.

மேலும் அந்தக் கால சினிமாவில் கதை மிகவும் முக்கியமான கருவாக இருந்தது. ஆனால் இன்று இருக்கக் கூடிய சினிமாவில் கதை பற்றி கவலைப்படுவதே இல்லை என்பது போல சொல்லியிருக்கும் விஷயம் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version