சொந்த புருஷனே கே.ஆர்.விஜயாவையும் தயாரிப்பாளர் தேவருடன் அனுப்பி வைத்த கதை..!

நடிகை கே.ஆர் விஜயா ஒரு பழம்பெரும் நடிகை. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். அம்மன் வேடத்திற்கு இவர் சிறப்பாக பொருந்தியதால் இவரை பலரும் தெய்வமாகவே நினைத்தார்கள்.

இது வரை சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவரை புன்னகை அரசி என்று ரசிகர்கள் அன்போடு அழைத்து இருக்கிறார்கள். இவரது நடிப்பில் பலரும் சொக்கி இருக்கிறார்கள்.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ்நாட்டில் இருக்கும் பழனி முருகன் கோயிலில் இவர் தந்தை அலுவலராகப் பணியாற்றி இருக்கிறார்.

நடிகை கே.ஆர் விஜயா..

சிறு வயது முதற்கொண்டு மேடை நாடகங்களில் நடித்து வந்த இவர் எம்ஆர் ராதாவால் விஜயா என்று இவரது இயற்பெயரை மாற்றி வைத்துக் கொண்டார். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக திரை உலகில் நிலைத்திருக்கும் இவர் 1993 கற்பகம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

மேலும் இவர் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, எஸ் எஸ் ராஜேந்திரன், முத்துராமன், ஏவிஎம் ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்ற பல பிரபல நடிகர்களோடு நடித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் வில்லன் நடிகர்களாக திகழ்ந்த ஆர் எஸ் மனோகர், எஸ் கே அசோகன், கே பாலாஜி ஆகியோரோடும் கதாநாயகியாக நடித்த இவர் காமெடி நடிகரான நாகேஷ் உடன் இணைந்து நடித்திருக்கிறார்.

திரைப்படங்களில் மார்க்கெட் குறைந்த போது சின்னத்திரை நாடகங்களிலும் விளம்பரங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் 1966-ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளரும் தொழிலதிபருமான சுதர்சன் எம் வேலாயுதம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஹேமலதா என்ற ஒரு மகளும் இருக்கிறாள்.

சொந்த புருஷனே தேவருடன் அனுப்பிய கதை..

இந்நிலையில் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட கே ஆர் விஜயாவை தேடி மிகச்சிறந்த வாய்ப்பு ஒன்று வந்தது. தேவர் பிலிம்ஸ் சேர்ந்த சாண்டோ சின்னப்ப தேவர் அக்கா தங்கை என்ற திரைப்படத்தை இயக்க இருந்தார்.

அந்த திரைப்படத்தில் அக்காவாக சௌகார் ஜானகியும், தங்கை வேடத்தில் கே ஆர் விஜயாவையும் நடிக்க திட்டமிட்ட இவர் கே ஆர் விஜயாவிடம் இந்த கதாபாத்திரத்தை நடிக்க கேட்க அவர் வீட்டுக்கே சென்று கேட்டிருக்கிறார்.

அப்படி அவர் கே ஆர் விஜயா வீட்டுக்கு சென்ற போது அங்கு அவரது கணவரும் அவரும் சோபாவில் அமர்ந்திருந்தார்கள். அந்த சோபாவில் சாண்டோ சின்னப்ப தேவர் அமர்ந்து தன் படம் எடுக்கக் கூடிய விஷயத்தையும் அதில் கே ஆர் விஜயா நடிக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்தார்.

இதனை அடுத்து கே ஆர் விஜயா நடிப்பே மறந்து விட்டதாக சொல்லி இதை அடுத்து அவரது கணவர் கண்டிப்பாக கே ஆர் விஜயா நடிப்பார் என்று சொல்லி அவரை வழி அனுப்பி வைத்தார்.

ஆச்சரியத்தில் உறைந்த தேவர்..

இந்நிலையில் தேவர் ஸ்டுடியோவில் இருக்கும் போது ஒரு லாரி வந்து இறங்கியது. அந்த லாரியில் இருந்து கே ஆர் விஜயா அனுப்பி வைத்த சோபா செட் இருந்தது. இதை பார்த்து ஆச்சரியமடைந்த தேவர் அந்த சோபா செட்டை தனது ஆபிஸில் போட்டு எப்போதெல்லாம் அங்கு வருகிறாரோ அதில் தான் அமர்ந்து பேசுவார்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு கே ஆர் விஜயா பல்வேறு வகையான கல்வி உதவிகளை மற்றவர்களுக்கு செய்த விஷயத்தை பற்றியும் பேசி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் கே ஆர் விஜயா மற்றும் அவரது கணவரின் தாராள குணத்தை பற்றி நேர்த்தியான முறையில் பகிர்ந்து வரும் அனைவரும் இந்த விஷயம் பற்றி தெளிவாகப் பேசி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version