உனக்கு அசிங்கமா இல்ல.. நடிகர் அசோக் செல்வனை பொழந்து கட்டும் தயாரிப்பாளர்..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் அசோக்செல்வன் இருந்து வருகிறார். அசோக்செல்வன் சூது கவ்வும் மாதிரியான திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலமாக வரவேற்பு பெற்று சினிமாவில் கதாநாயகனாக மாறினார்.

ஆரம்பத்தில் அவர் தேர்ந்தெடுத்த கதைகளே அவருக்கு நிறைய கை கொடுத்தன. தொடர்ந்து தெகிடி ,பீட்சா 2 மாதிரியான திரைப்படங்களில் நடித்து அதிக வரவேற்பை பெற்றார் அசோக் செல்வன். இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்து கொண்டார்.

அதற்கு பிறகு அருண்பாண்டியனின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள் இருப்பதாக சினிமாவில் பேச்சுகள் இருக்கின்றன. இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான கே ராஜன் அசோக் செல்வன் குறித்து நிறைய விஷயங்களை அசோக் செல்வன் நடித்த எமக்கு தொழில் ரொமான்ஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.

அசோக் செல்வன் அட்ராசிட்டி:

அதில் அவர் கூறும் போது படப்பிடிப்புகளுக்கு வரும்பொழுது பௌன்சர்களை அழைத்துக்கொண்டு படப்பிடிப்பிற்கு வருகிறார். படபிடிப்பு தளத்திற்கு 100 மீட்டர் வரை இந்த பௌன்சர்கள் பாதுகாத்து அவரை கொண்டு வந்து விட்டுவிட்டு அங்கேயே காத்திருக்கின்றனர்.

பிறகு படப்பிடிப்பு முடிந்து வந்ததும் மீண்டும் அழைத்து செல்கின்றனர் அப்படி என்ன தீவிரவாதியா அவர்? அவரை என்ன சுட்டு விடப் போகிறார்களா? இப்படி ஆட்களை அழைத்துக்கொண்டு வருகிறார். இதற்கெல்லாம் தயாரிப்பாளர்கள்தான் காரணம்.

இந்த மாதிரியான பில்டப் கொடுக்கும் நடிகர்களை வேண்டாம் என்று கூறிவிட்டு வேறு நடிகர்களை வைத்து படத்தை எடுக்க வேண்டும். ஆந்திரா, கர்நாடகா போன்ற திரைத்துறைகளில் தயாரிப்பாளர்கள் வச்சதுதான் சட்டம் என்கிற நிலை இருக்கிறது.

கடுப்பான கே ராஜன்:

ஆனால் இங்குதான் தயாரிப்பாளர்கள் இப்படி நடிகர்களுக்கு அடி பணிந்து போகிறார்கள். அதேபோல படத்தின் டப்பிங் வேலை நடக்கும்போது முழு சம்பளத்தையும் கேட்கின்றனர் நடிகர்கள். முன்பொரு காலங்களில் ஜெய்சங்கர் போன்ற நடிகர்கள் படம் வெளியாவதற்கு அவர்களது கை காசை கொடுத்து உதவி செய்திருக்கின்றனர்.

ஆனால் இப்பொழுது இருக்கும் நடிகர்கள் மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்று பேசி இருந்தார் கே ராஜன். மேலும் அந்த சந்திப்புக்கு அப்பொழுது அசோக் செல்வன் வரவே இல்லை. அது குறித்து பேசிய கே ராஜன் கூறும் போது இப்படி பட வெளியிட்டு விழாக்களுக்கு கூட ஹீரோக்கள் வரமாட்டேன் என்கிறீர்கள் தயாரிப்பாளர்களை உங்களின் அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?.

எல்லோருக்கும் ஒன்று கூறிக் கொள்கிறேன் எப்போதும் தலைக்கணம் மட்டும் இருக்க கூடாது. நெற்பயிரை இருக்க வேண்டும் நெற்பயிரின் தலைகனம் அதிகரிக்கும் பொழுது அது குனிந்து விடும் அப்படித்தான் மனிதர்களும் இருக்க வேண்டும் என்று நேரடியாகவே அசோக் செல்வனை பேசியிருக்கிறார் கே ராஜன் .

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version