எல்லாமே பச்சையா தெரியுது..? – வெண்ணைக்கட்டி உடம்பை காட்டி.. வெறியேத்தும் ஹுமா குரேஷி..!

காலா படத்தில், ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்திருப்பார் ஹூமா குரேஷி. பா. ரஞ்சித் இயக்கிய இந்த படத்தில், ரஜினிக்கு மனைவியாக நடித்தவர் ஈஸ்வரி ராவ். ஆனால், முன்னாள் காதலி கேரக்டரில், ஹூமா குரேஷிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும்.அதைத்தொடர்ந்து, வினோத் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த வலிமை படத்தில், நடித்திருந்தார் ஹூமா குரேஷி. இதில், கதாநாயகன் அஜீத் உடன் பணிபுரியும் உயர் போலீஸ் அதிகாரியாக, கம்பீரமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு என சண்டைக்காட்சிகள் தந்து, படத்தில் இவரது முக்கியத்துவத்தை அதிகப்படுத்தி இருந்தார் இயக்குநர் வினோத்.

டெல்லியைச் சேர்ந்த ஹூமா குரேசி, படித்தது, பட்டம் பெற்றது எல்லாமே டெல்லியில்தான். மாடலிங் துறையில் இருந்ததால், பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அதே போல், மும்பையில் சாம்சங் போன் விளம்பர படங்களில் நடிக்க வந்த இவரை பார்த்து, இயக்குநர் அனுராக் காஷ்யப் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். அப்படித்தான், சினிமா உலகுக்குள் வந்தவர் குரேஷி.

நடிக்க வருவதற்கு முன்பே, விளம்பர படங்களில் நடித்தது மட்டுமின்றி குரேஷி, நாடக நடிகையாகவும் இருந்திருக்கிறார். அதனால், திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு வெகு எளிதாக இருந்திருக்கிறது. இதனால், மற்ற நடிகைகள் நடிக்க சிரமப்படும் சில காட்சிகளில் இவரால் வெகு இயல்பாக நடிக்க முடிந்திருக்கிறது. இதனால், இந்தியில் அடுத்தடுத்து இந்தியில் பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்திருக்கிறது. எனினும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்திருக்கிறார் குரேஷி. இதனால், சிறந்த நடிப்புக்காக பல விருதுகளை இவர் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் புதுடில்லி பல்கலை கழகத்தில், வரலாற்று ஆங்கில பிரிவில் பட்டம் பெற்றவர். குரேஷியின் முதல் படம், இரண்டு பாகங்களாக வெளிவந்த கேங்க்ஸ் ஆப் வாசேப்பூர். இந்த படத்தில், துணை நடிகையாக தான் குரேஷி நடித்திருந்தார். எனினும், இவரது நடிப்பு பலரது பாராட்டை பெற்றது.ரசிகர்கள் மத்திியில், நல்ல வரவேற்பை பெற்றார். சிறந்த அறிமுக நடிகை, சிறந்த துணை நடிகை விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இவரது பளபளப்பான நிறமும், தோற்றமும், உயரமும், ஸ்டைலும் நடிப்பு திறனும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை எளிதாக பெற்றுத் தந்தது. இதனால், இந்தி திரையுலகில், பல படங்களில் இவர் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது வீடியோக்களை, புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, இரவு நேரங்களில் ரசிகர்களின் தூக்கத்தையும் கெடுத்து விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில், இன்னும் பல படங்களில் குரேஷி நடிக்க வேண்டும் என, இவரது ரசிகர்கள் பலரும் ஆர்வமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …