“டேய் எந்திரிச்சி போ..” மகனை விட வயசு கம்மியான பொண்ணு கூட அது..? காத்து கருப்பு கலை.. பப்லூ.. மோதல்..!

பிரபல நடிகர் பப்லு பிருதிவிராஜ் சமீபத்தில் தன்னுடைய இரண்டாவது மனைவி ஷீத்தல்-ஐ பிரிந்தார். இதனை இருவருமே மறைமுகமாக உறுதிப்படுத்தினார்கள். இந்த விவகாரம் இணைய பக்கங்களில் பேசு பொருளான பிறகு பப்லு பிரித்விராஜ் பல்வேறு பேட்டிகளில் கலந்து கொண்டு தன்னுடைய தரப்பு விளக்கத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அவர் பிரதானமாக கூறக்கூடிய ஒரு பதில் என்னவென்றால்.. ஆமாம்.. நான் செய்தது தவறுதான். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயங்களை பொதுவெளியில் நான் வைத்திருக்கக் கூடாது.

நான் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்றதும் அதனை பலரும் நேர்மறையாக.. பாசிட்டிவாக.. எடுத்துக் கொள்வார்கள். பெரிய மனதுடன் என்னுடைய உணர்வுகளை புரிந்து கொள்வார்கள் என்று நம்பினேன்.

ஆனால், அதற்கு நேர் மாறாக தான் நடந்தது பலரும் இதனை தவறாக புரிந்து கொண்டார்கள். நெகட்டிவான பார்வையிலேயே என்னை பார்த்தார்கள். என்னை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்கள்.

அவர்களுடைய விமர்சனத்திற்கு ஏற்றார் போல என்னுடைய வாழ்க்கை தற்பொழுது மாறிவிட்டது. என்னுடைய இரண்டாம் மனைவி என்னை பிரிந்து சென்று விட்டார் எனக் கூறியிருந்தார் பப்லு.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் காமெடியான வீடியோக்களை வெளியிட்டு பெருவாரியான ரசிகர்களின் கவனத்தைப் பெற்று இருக்கும் காத்து கருப்பு கலை தொகுத்து வழங்கிய ஒரு பேட்டியில் கலந்து கொண்டார் பப்லு பிரித்திவிராஜ்.

இந்த பேட்டியில் பல்வேறு வில்லங்கமான கேள்விகள் எழுப்பப்பட்டது. குறிப்பாக உங்கள் மகனை விட வயதில் குறைவான ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் இது தவறு என்று உங்களுக்கு தெரியவில்லையா..?

அந்தப் பெண் உங்கள் மகனை விட வயதில் சிறிய பெண்.. எனவே, அவரே உங்களை விரும்பியிருந்தாலும் கூட.. இது தவறு என்று எடுத்துக் கூறி அந்த பெண்ணுக்கு நீங்கள் புரிய வைத்திருக்க வேண்டும்.

ஆனால் அந்த பெண்ணுடன் நீங்கள் சேர்ந்து கொண்டு கூத்தடித்துக் கொண்டிருக்கிறீர்கள். கல்யாணம் செய்து கொண்டு இருக்கிறீர்கள் இது உங்களுக்கு தவறாக தெரியவில்லையா..? என கேள்வி எழுப்பினார் காத்து கருப்பு கலை.

இதனை கேட்டு கடுப்பான பிருத்திவிராஜ்.. உன்னுடைய கருத்து இது.. ஆனால் என்னுடைய கருத்து வேறு.. எனக்கு பிடித்த ஒரு விஷயம் உனக்கு பிடிக்க வேண்டும்.. என்று நான் உன்னை கட்டாயப்படுத்த முடியாது.

அதேபோல உனக்கு பிடித்த ஒரு விஷயத்தை எனக்கு பிடிக்க வேண்டும் என்று நீ கட்டாயப்படுத்த கூடாது.. உனக்கு பிரியாணி தான் பிடிக்கும் என்றால் சாப்பிடு.. ஆனால் அதனை சாப்பிடக்கூடாது.. என்றோ அல்லது வேறு உணவை சாப்பிடு என்றோ நான் உன்னை வற்புறுத்தக் கூடாது.. என்று ஒரு விளக்கத்தை கொடுத்து.. யார்ரா நீ.. எந்திரிச்சு போ என்று கடுப்பாகி இருக்கிறார் பிருத்திவிராஜ்.

இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam