அண்மை காலமாகவே திரைப்பட வாய்ப்புகளை பெறுவதற்காக அட்ஜஸ்ட்மென்ட்கள் அதிகரித்து வருவதாகவும், அது பற்றிய வெளிப்படை பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் கார்த்தி படத்தில் நடித்த நடிகை ஜீவிதா தற்போது இது குறித்து சில தகவல்களை கூறி ரசிகர்களின் மனதில் ஷாக்கிங் ஆன நிலையை உருவாக்கி இருக்கிறார்.
சீரியல் நடிகை ஜீவிதா..
சின்னத்திரை சீரியல் நடிகையான ஜீவிதா வில்லி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். முதல் முதலாக மனதில் உறுதி வேண்டும் என்ற சீரியலின் மூலம் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.
சீரியல்களில் நடிப்பதோடு நின்று விடாமல் திரைப்படங்களிலும் நடித்து வரக்கூடிய இவர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிகர் கார்த்தியோடு நடித்திருப்பார். இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிய அளவு பாராட்டுதலை பெற்றது.
திரையுலகில் மட்டுமல்லாமல் சின்னத்திரைகளிலும் அட்ஜஸ்ட்மென்ட் அதிகரித்து இருப்பதாக கூறி இருக்கும் இவர் அண்மை பேட்டி ஒன்றில் புரொடக்சன் மேனேஜர் வந்ததுமே ம்மா.. அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டும் என்று தான் கூறுவாராம்.
இது போன்ற அவலம் இன்று தொடர்கதையாக இருக்கிறது. மேலும் மறை முகமாக கேட்பதற்கு பதிலாக நேரடியாகவே இது பற்றி பேசியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்ற கருத்தையும் கூறியிருக்கிறார்.
அட்ஜெஸ்ட்மென்ட்-க்கு 40,000 சம்பளம்..
அப்படி அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய புரொடக்சன் மேனேஜர் கூறுவதோடு மட்டுமல்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் செய்கின்ற நடிகைகளுக்கு ஒரு நாளைக்கு 40,000 சம்பளம், ஆனால் அப்படி செய்யாத நடிகைகளுக்கு பத்தாயிரம் மட்டும் தான் சம்பளம் என கூறுவார்களாம்.
இதனை அடுத்து நான் பத்தாயிரம் ரூபாய் போதும் என்று கூறி டிவி சீரியல் பலவற்றிலும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறேன் என்று சீரியல் நடிகை ஜீவிதா கூறிய கருத்து தற்போது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
படுக்கைக்கு செல்லக்கூடிய நடிகைகளுக்கு 40 ஆயிரம் சம்பளம் அதற்கு ஒத்துக்கொள்ளாமல் நடிப்பை மட்டும் காட்டக்கூடிய நடிகைகளுக்கு பத்தாயிரம் மட்டுமே ஒரு நாள் சம்பளம் என்பதை இந்த இடத்தில் நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
இதனை வெளிப்படையாக தற்போது பேசியிருக்கும் ஜீவிதாவை பற்றி பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் கருத்துக்களை கூறியதோடு இந்த விஷயத்தை தான் கூறினால் தவறாக மாறிவிடும் என்ற பார்வையை சிறப்பாக எடுத்துக் கூறினார்.
மேலும் உண்மையை யார் சொன்னால் என்ன நான் சொன்னால் என்ன, ஜீவிதா சொன்னால் என்ன.. உண்மை.. உண்மை தானே.. என்ற ரீதியில் விமர்சனம் செய்திருக்கக் கூடிய பயில்வானது உணர்வுகளை ரசிகர்கள் கட்டாயம் புரிந்து கொள்வார்கள்.
மேலும் இந்த விஷயமானது தற்போது ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பரவி வருவது மட்டுமல்லாமல், இப்படி எல்லாம் வகை பிரித்து சம்பளம் கொடுப்பார்களா? அதற்கு உடன்பட்டால் தான் நடிக்க முடியுமா? என்பது போன்ற பல விதமான கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வளவோ சட்ட திட்டங்கள் இருக்கும் போதும் பெண்களுக்கு இது போன்ற அவலங்கள் திரைத்துறையில் மட்டுமல்லாமல் அவர்கள் பணி புரியும் துறைகளிலும் இன்று நடப்பது அதிகரித்து வருகிறது என்று கூறலாம்.