“உடலுக்கு ஹெல்தியான கடலை மிட்டாய்..!” – வீட்டிலேயே செய்யலாம்..!

முந்திரி, பாதாம், பிஸ்தா வால்நட்டை விட அதிக அளவு சத்துக்களை கொண்டிருக்கும் நிலக்கடலையை வைத்து உங்கள் பிள்ளைகளுக்கு பாரம்பரிய இனிப்பு வகையான கடலை மிட்டாயை செய்து கொடுப்பதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது.

 அந்த கடலை மிட்டாயை நீங்கள் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடலை மிட்டாய் செய்ய தேவையான பொருட்கள்

1.நிலக்கடலை அரை கிலோ

2.வெல்லம் இரண்டு கப்

3.நெய் 2 ஸ்பூன்

செய்முறை

முதலில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் நிலக்கடலையை ஒரு கடாயில் போட்டு கருகாமல் இளந்தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு இதில் இருக்கக்கூடிய தோலை சூடு ஆறிய பிறகு நீக்கி விட வேண்டும்.

இதனை அடுத்து நீங்கள்  வைத்திருக்கும் வெல்லத்தை சிறிதளவு நீரை சேர்த்து உருக்குங்கள். பிறகு வெல்லம் உருகிய பிறகு ஒரு வடிகட்டியை கொண்டு வடித்து வெல்லத்தில் இருக்கும் தூசிகள் அழுக்குகள் போன்றவற்றை நீக்கிவிட்டு மற்றொரு பாத்திரத்தில் போட்டு பாகு கம்பி பதம் வரும் வரை நன்கு சூடாக்கவும்.

ஒன்று அல்லது இரண்டு கம்பி பதம் வந்த பிறகு நீங்கள் தோல் நீக்கி இருக்கும் வேர்கடலையை இரண்டாக உடைத்த பிறகு இந்த பாகோடு சேர்த்து கிளற வேண்டும். இந்த சமயத்தில் நீங்கள் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுவது மிகவும் நல்லது.

மேலும் நீங்கள் ஒரு தட்டத்தில் நெய்யை தேய்த்து விட்டு இந்த கலவையை அப்படியே எடுத்து அதில் கொட்டி விட்டு ஆறவிடுங்கள். சிறிது நேரம் கழித்து உங்களுக்கு தேவையான வடிவத்தில் அதை வெட்டி எடுத்து விடுங்கள் எப்போது சுவையான கடலை மிட்டாய் தயார்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய இந்த கடலை மிட்டாய் உங்கள் வீட்டிலேயே சிறந்த முறையில் இப்படி நீங்கள் செய்து தரலாம். இதனை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்துப் பாருங்கள் கட்டாயம் சுவைத்து மகிழ்வார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …