சில நடிகர்கள், சில காட்சிகளில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். ஏனெனில் அவர் நடித்த காட்சிகள், பெரிய அளவில் ரசிகர்கள் மனதில் ரீச் ஆகி விடுகிறது.
உதாரணமாக வெண்ணிலா கபடிக்குழு படத்தில், 50 பரோட்டா சாப்பிடும் போட்டி காட்சியில் நடித்து பிரபலமானார் நடிகர் சூரி. இப்போது ஒரு படத்துக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் ஹீரோவாக வளர்ந்திருக்கிறார்.
உதவி இயக்குனர் கேரக்டரில்…
காதல் படத்தில், உதவி இயக்குனராக நடித்திருப்பார் சரவணன். சினிமா வாய்ப்பு தேடும் சில இளைஞர்களின் புகைப்பட ஆல்பங்களை பார்த்து, நடித்து காட்டும்படி சொல்வார். சேவல் பண்ணை என்ற மேன்சன் ரூமில் ஐந்தாறு பேருடன் தங்கிக்கொண்டு, ஒரு டூபாக்கூர் ஆசாமியாக அவர் நடித்திருப்பார்.
உன்னைய மைண்டுல வெச்சிருக்கேன். கண்டிப்பாக யூஸ் பண்ணிக்கிறேன் என டயலாக் பேசி, அந்த படத்தின் மூலம் பிரபலமானதால் காதல் சரவணன் என்றே அழைக்கப்படுகிறார்.
காதல் சரவணன்
தொடர்ந்து மஞ்சப்பை, சிறுத்தை, ஏழுமலை, வேட்டைக்காரன் போன்ற சில படங்களில் சில காட்சிகளில் மட்டுமே காதல் சரவணன், சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்பை பெற முடியவில்லை.
மாற்றுத்திறனாளி மனைவி
இந்நிலையில், தனது மனைவியுடன் ஒரு நேர்காணலில் அவர் பங்கேற்றார். அப்போது பல விஷயங்களை அவரது மனைவி மலர் பகிர்ந்துக்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,
நான் மாற்றுத்திறனாளி. என்னால் மற்றவர்களை போல நடக்க முடியாது. என்னை பெண் பார்ப்பதற்காக வந்த ஒருவருடன், சரவணனும் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். நண்பருக்கு துணை மாப்பிள்ளை போல தான் அவரும் வந்திருந்தார்.
இதையும் படியுங்கள்: ஒன்னுல்ல.. ரெண்டுல்ல.. மூணு ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. தெறிக்கும் கார்த்தியின் லைன் அப்..!
நான் உடலில் குறைபாடுடன் இருந்ததால் என்னை யார் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார்கள் என்ற வேதனையில் இருந்தேன். திருமணமே செய்துக்கொள்ள வேண்டாம் என்ற மனநிலையிலும் இருந்தேன்.
எனினும் என் குடும்பத்தினர் கூறியதால், அவர்கள் பெண் பார்க்க வந்துவிட்டு சென்றனர். பிறகு நகை பிரச்னை காரணமாக அந்த திருமணம் நின்று போய்விட்டது.
கடவுளும் என்னை தண்டிச்சிட்டார்..
அதன்பிறகு சென்னைக்கு போய் விட்டேன். அங்கு டீச்சராக பணிசெய்த போது எனக்கு சில பிரச்னைகள் ஏற்பட்டது. அப்போது காதல் சரவணனை அழைத்து, என்னை கடவுளும் தண்டிச்சிட்டார். நீங்களும் இப்படி பண்ணீட்டிங்களே என்று கேட்டுவிட்டேன்.
இதையும் படியுங்கள்: அவ பண்றது எல்லாமே.. இப்படி தான் இருக்குது.. வனிதாவின் சகோதரி ஸ்ரீதேவி விஜயகுமார் வேதனை..!
நீங்களும் அந்த மாப்பிள்ளையோடு வந்தவர்தானே, எல்லாம் தெரிஞ்சுதானே பெண் பார்க்க வந்தாங்க. அப்புறம் எதுக்கு வேண்டாமுன்னு சொல்லிட்டு போகணும் என்று கேட்டேன்.
அதற்கு அவர், நீங்க தப்பா நினைக்கலைன்னா, நான் ஒண்ணு சொல்றேன். உங்களை நானே கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று கேட்டார். அதன்பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடந்தது.
வாழ்க்கை சந்தோஷமாக
முதலில் நான் கொஞ்சம் பயப்பட்டேன். ஆனால் எங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது. இரண்டு ஆண் பிள்ளைகள் எங்களுக்கு இருக்கின்றனர். எங்கு சென்றாலும், என் கணவர் என்னையும் உடன் அழைத்துச் செல்கிறார், என்று கூறியிருக்கிறார் காதல் சரவணன் மனைவி மலர்.
கடவுளும் என்னை தண்டிச்சிட்டார்.. நீங்களும் இப்படியா..என்று கேட்ட பெண்ணை, திருமணம் செய்துக்கொண்டு நல்ல ஒரு வாழ்க்கையை தந்துள்ள காதல் சரவணனை பலரும் பாராட்டி வருகின்றனர்.