ஹிந்தியில் நான் நடிக்காததற்கு இது தான் காரணம்..! – ரகசியம் உடைத்த காஜல் அகர்வால்..!

தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். சென்னை 28 முதல் பாகத்தில், தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். நான் மகான் அல்ல, மாரி, மெர்சல், ஜில்லா, துப்பாக்கி, மாவீரன் போன்ற படங்களில், இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில், காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

காஜல் அகர்வால், திருமணம் செய்துகொண்டு, கடந்தாண்டில் அழகான குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தையுடன் இருக்கும் தனது புகைப்படங்களை அவர் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி வெளியிட, அது டிரெண்டாகி வந்தது. ஆனால், அந்த புகைப்படங்களில் சற்று, குண்டாக காணப்பட்டார்.

இந்நிலையில், கடந்த வாரத்தில் ஒரு நிகழ்ச்சியில், தனது கணவருடன் காஜல் அசுர்வால் பங்கேற்றார். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களளில் காஜல் அகர்வால் ஸ்லிம் ஆக காணப்பட்டார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியமடைந்தனர். காஜல் அகர்வால், திருமணத்துக்கு முன்பு இருந்ததை போலவே, இப்போது காணப்படுகிறார் என்றும் பலர் பாராட்டினர்.

இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை காஜல் அகர்வால், எனது தாய்மொழி இந்தி தான். பாலிவுட் படங்களை பார்த்து, பார்த்து தான் நான் வளர்ந்தேன். ஆனால், தமிழ் சினிமாத் துறையில் உள்ள கட்டுப்பாடுகள் நிறைந்த ஒழுக்கம், தொழில் தர்மம், மரியாதை போன்றவை இந்தி சினிமா துறையில் இல்லை. இந்த மூன்று விஷயங்களை அங்கு காண முடியாது, என்று ஓபனாக பேசி இருக்கிறார்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பதுதான் தமிழர்களின் கலாசாரம். அதனால்தான், தமிழ் சினிமாவில் இந்த மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என, ரசிகர்கள் அதற்கு கமெண்ட் மூலம் பதில் அளித்து, காஜல் அகர்வாலின் கருத்துக்கு, லைக்ஸ் தெரிவிக்கின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …