“சினிமாவுல கூட இவ்ளோ கவர்ச்சி காட்டலையே..” – தீயாய் பரவும் காஜல் அகர்வாலின் புகைப்படங்கள்..!

நடிகை காஜல் அகர்வால் அல்ட்ரா மாடர்ன் உடையில், தற்போது விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய் , அஜித் , சூர்யா , தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார்.

சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்த காஜல் அகர்வால், தன்னுடைய கணவர் கூறினால் உடனே சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்றும், ஆனால் அவரும், தன்னுடைய குடும்பத்தினரும் தான் மீண்டும் திரையுலகில் நடிக்க முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக கூறினார்.

2021 இல் வெளியான வெப் தொடர் லைவ் டெலிகாஸ்டில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். அவரது நடிப்பில் ஹேய் சினாமிகா, கோஷ்டி, பாரிஸ் பாரிஸ் ஆகிய தமிழ்ப் படங்கள் வெளிவர உள்ளன. இந்தியன் 2, கருங்காப்பியம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சிரஞ்சீவி, ராம் சரண் நடித்துள்ள ஆச்சார்யாவிம் காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.காஜல் அகர்வால் நாகார்ஜுனின் கோஸ்ட் படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார்.

அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியான நிலையில், திடீரென அவரை படத்திலிருந்து நீக்கினர். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், சினிமாவுல கூட இம்புட்டு கவர்ச்சி காட்டுனதில்லையே..? என்று வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …