நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார். இவருடைய குழந்தைக்கு நீல் என பெயர் சூட்டி இருக்கின்றனர்.
திருமணம் குழந்தை பேரு என சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை காஜல் அகர்வால் தற்பொழுது மீண்டும் சிறு இடைவெளிக்கு பிறகு தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி விடுவார் காஜல் அகர்வால் என்று பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால். அவையெல்லாம் உண்மை கிடையாது என்று போட்டு உடைத்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.
தமிழில் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் இவர் தற்போது தெலுங்கிலும் முன்னணி ஹீரோ நடிக்க உள்ள புதிய திரைப்படம் முதலில் ஹீரோயினாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
நடிகர் பாலகிருஷ்ணா நடிக்க உள்ள புதிய தெலுங்கு படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இயக்குனர் ரவிபுடி இயக்க உள்ள இந்த திரைப்படம் பாலையாவின் 108 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வீர ஷிம்மா ரெட்டி என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் அவருக்கு ஜோடியாக படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்நிலையில், பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தில் நடிகர் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. பாலகிருஷ்ணா படம் என்றாலே ஹீரோயின்கள் கிளாமராக தோன்றுவார்கள் எனவே நடிகை காஜல் அகர்வால் இந்த படத்தில் சம்மதம் தெரிவிப்பதை தெரிவித்து இருப்பதை தொடர்ந்து திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியாக நடிப்பதில் எந்த ஒரு தடையும் இல்லை என்று காஜல் அகர்வால் தாராளமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர்கள் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் எது குதிரையினே தெரியலையே என்று புலம்பி வருகின்றனர்.