தமிழ் திரை உலகில் அதிக அளவு மும்பை இறக்குமதி நடிகைகள் இருக்கிறார்கள். அது என்னவோ வடநாட்டு பெண்கள் என்றால் தென்னிந்திய ஆண்களுக்கு அவ்வளவு மோகம் உள்ளது என்று கூறலாம். அந்த வகையில் வடநாட்டில் பிறந்த காஜல் அகர்வால் தமிழில் கதாநாயகியாக பொம்மலாட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.
தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் இந்தி படத்திலும் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் படையை பெற்றிருக்கிறார். மேலும் இந்த ரசிகர்கள் காஜலுக்காக எதையும் செய்யக்கூடிய மனோதிடம் படைத்தவர்கள்.
காஜல் அகர்வால்..
தெலுங்கில் வெளி வந்த மகதீரா படத்தை தொடர்ந்து தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர். தமிழில் அஜித், விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.
மேலும் தமிழில் இவர் நடித்த சரோஜா, சிங்கம், மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் படங்கள் ரசிகர்களின் மத்தியில் பேசும் படங்களாக மாறியதோடு மட்டுமல்லாமல் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியும் இருக்கிறார்கள்.
தற்போது உலகநாயகன் கமலஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் அவரோடு இணைந்து நடித்திருக்கிறார். திருமணம் ஆகி குழந்தையோடு இருக்கக்கூடிய காஜல் அகர்வால் அவ்வப்போது தன் குழந்தை, கணவர் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவார்.
பிள்ளை பெற்ற பிறகு சற்று உடல் எடை கூடி குண்டாக இருந்த இவர் தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து மீண்டும் திரை உலகில் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறார்.
மாறிய முகம்..
இந்நிலையில் அண்மையில் இவர் உடல் எடை வெகுவாக குறைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு முகம் கூட மாறியுள்ளது. இந்த மாற்றத்தை பார்த்து அதிர்ச்சியாக இருக்கும் ரசிகர்கள் அட இது யாருது.. நம் காஜல் அகர்வாலா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.
நீங்களும் ஒரு முறை புகைப்படத்தை பார்த்தால் நிச்சயமாக அவர் உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், எந்த அளவு உடலை குறைத்து இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த அளவு உடல் எடையை குறைத்து இருக்கக்கூடிய இவருக்கு புதிய பட வாய்ப்புகள் கட்டாயம் வந்து சேரும்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு வளர்ந்து வரும் நடிகைகளும், அறிமுக நடிகைகளும் எங்கே காஜல் அகர்வால் தங்களுக்கு போட்டியாக வந்து விடுவாரோ? என்ற பீதியை கிளப்பி விட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.
இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் எந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமாண்டுகளை போட்டு வருகிறார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை ஒருமுறை உற்றுப் பாருங்கள். உங்களுக்கே கண்டிப்பாக தெரியும் காஜல் எந்த அளவு தன் உடல் எடையை குறைத்திருக்கிறார். இன்னும் சில பெண் ரசிகைகள் எப்படி இந்த அளவுக்கு உடல் எடையை குறைத்து இருக்கிறார் டிப்ஸ் இருந்தால் கூறுங்கள் என்று கூட கேட்டு இருக்கிறார்கள்.