ப்பா.. ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இம்புட்டு கவர்ச்சியா..? – கதி கலங்க வைக்கும் காஜல் அகர்வால்..!

தமிழ் தெலுங்கு என தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தவர்.

அதேபோல தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தெலுங்கு சினிமாவிலும் உச்ச நடிகையாக வலம் வந்தவர். கடந்த 2020 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்டநாள் காதலரும் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபருமான கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து ஐந்து மாதத்தில் கர்ப்பம் தரித்த இவர் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.

கர்ப்பகால ஓய்வுக்குப் பிறகு மீண்டும் தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கும் நடிகை காஜல்அகர்வால் உடல் எடையை கணிசமாக குறைத்து மீண்டும் பழைய காஜல் அகர்வாலாக உருவெடுத்திருக்கிறார். மட்டுமில்லாமல் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கிவிட்ட நிலையில் அந்த படத்தில் ஏற்கனவே பாதி நடித்து முடித்துவிட்ட நடிகை காஜல் அகர்வால் மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் தெலுங்கில் முன்னணி கதாநாயகர்கள் ஹீரோவாக நடிக்க கூடிய மூன்று படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்ற தகவலை நம்முடைய தளத்தில் பார்த்திருந்தோம்.

தற்போது தமிழிலும் இன்னொரு படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். அதுதான் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் நடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம்.

இந்த இந்த இந்த படத்தை இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிகை காஜல் அகர்வால் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்த படத்தில் நடிகர் ரஜினியும் சில நிமிட காட்சிகளில் தோன்றுவார் என்றும் ராகவா லாரன்ஸின் நட்புக்காக சில காட்சிகளில் நடித்திருக்கிறார் என்றும் கூட தகவல்கள் இருக்கின்றன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

நடிகர் ரஜினிகாந்த் சில காட்சிகளில் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். நடிகை காஜல் அகர்வால் இந்த படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளிலும் கலந்துகொள்ள இருக்கிறார்.

இந்நிலையில் கவர்ச்சியான உடையில் குதிரை சவாரி செய்யும் ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் கூட.. இவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறாரே..? என்று அவருடைய அழகை அணு அணுவாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …